/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ரூ.8,000 சம்பா தொகுப்பு நிதி தர விவசாயிகள் கோரிக்கை
/
ரூ.8,000 சம்பா தொகுப்பு நிதி தர விவசாயிகள் கோரிக்கை
ரூ.8,000 சம்பா தொகுப்பு நிதி தர விவசாயிகள் கோரிக்கை
ரூ.8,000 சம்பா தொகுப்பு நிதி தர விவசாயிகள் கோரிக்கை
PUBLISHED ON : அக் 30, 2025 12:00 AM
தஞ்சாவூர்: தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலர் சுவாமிமலை விமல்நாதன் கூறியதாவது:
இந்தாண்டு மேட்டூரில் தேவையான தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும், வட கிழக்கு பருவமழையும் நன்றாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், விவசாயிகள் முழு நம்பிக்கையுடன் சம்பா, தாளடி சாகுபடியை துவங்கியுள்ளனர்.
விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக, தமிழக அரசு இயந்திர நடவு, விவசாய தொழிலாளிகள் கைநடவு என பாரபட்சம் இல்லாமல், ஏக்கர் ஒன்றுக்கு, 8,000 ரூபாய் வழங்க வேண்டும்.
ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு மட்டுமே என இல்லாமல், குறைந்த பட்சம் நான்கு ஏக்கருக்கு இந்த நிதியுதவியை வழங்க வேண்டு ம்.
மேலும், குத்தகை விவசாயிகளும் பலன் கிடைக்கும் வகையில் சம்பா சிறப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இந்த திட்டத்தை தமிழக முதல்வர், கல்லணையில் துவக்கி வைக்க வேண்டும். இந்த திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக அரசு அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

