/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
துாள்செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் கால்வாய் வெட்ட நிலம் வழங்க விவசாயிகள் எதிர்ப்பு
/
துாள்செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் கால்வாய் வெட்ட நிலம் வழங்க விவசாயிகள் எதிர்ப்பு
துாள்செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் கால்வாய் வெட்ட நிலம் வழங்க விவசாயிகள் எதிர்ப்பு
துாள்செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் கால்வாய் வெட்ட நிலம் வழங்க விவசாயிகள் எதிர்ப்பு
PUBLISHED ON : டிச 10, 2024 12:00 AM
துாள்செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம்
கால்வாய் வெட்ட நிலம் வழங்க விவசாயிகள் எதிர்ப்பு
ஓசூர், டிச. 10-
தர்மபுரி மாவட்டத்திலுள்ள துாள்செட்டி ஏரிக்கு, தென்பெண்ணையாற்று நீரை கொண்டு செல்ல கால்வாய் வெட்டும் பணிக்கு, நிலம் வழங்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, சப் கலெக்டரிடம் மனு வழங்கினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தென்பெண்ணையாற்றிலுள்ள ஆழியாளம் அணைக்கட்டிலிருந்து, ஆழியாளம், ராமாபுரம், பாத்தக்கோட்டா, யாகனப்பள்ளி வழியாக கனிஞ்சூர் வரை, 8.80 கி.மீ., துாரம் வலதுபுற பாசன கால்வாய் செல்கிறது. இதை மேலும், 20 கி.மீ., துாரம் நீட்டிப்பு செய்து, தென்பெண்ணையாற்றில் அதிகளவு உபரி நீர் செல்லும்போது, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள துாள்செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை, தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்காக, ஆழியாளம் அணைக்கட்டிலிருந்து, கனிஞ்சூர் வரை ஏற்கனவே உள்ள, 8.80 கி.மீ., துார வலதுபுற பாசன கால்வாயை, 20 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைப்பு செய்து, கரையின் இருபுறமும் கான்கிரீட் சுவர் கட்டப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த, சின்ன பேட்டகானப்பள்ளி, சொன்னையூர், அகரம், கண்ணசந்திரம் வழியாக, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான தொட்டதிம்மனஹள்ளி வரை, 20 கி.மீ., துாரத்திற்கு, புதிய கால்வாய் வெட்ட வேண்டியுள்ளது. அதற்காக, அப்பகுதி விவசாய நிலங்களில், 80 முதல், 110 அடி வரை கால்வாய்க்கு, தனி தாசில்தார் தலைமையில் நிலம் எடுக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள விவசாயிகள், பம்பிங் முறையில் துாள்செட்டி ஏரிக்கு தண்ணீரை எடுத்து செல்ல வேண்டும். இல்லா விட்டால், மாற்றுவழியில் எடுத்து செல்லக்கூறி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். கால்வாய் வெட்ட தேர்வு செய்துள்ள விவசாய நிலங்களின் ஆவணங்களை, சம்பந்தப்பட்ட விவசாயிகள், ஓசூர் சப்கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படாது. நீதிமன்றத்தில் பணத்தை செலுத்தி விடுவோம் என, அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
இதனால், வேளாண் விவசாயிகள் நலச்சங்க செயல் தலைவர் மணி, நிர்வாகிகள் குமரேசன், முனிராஜ், முரளி மற்றும் விவசாயிகள் அடங்கிய குழுவினர், நேற்று ஓசூர் சப் கலெக்டர் பிரியங்காவிடம், கோரிக்கை மனு வழங்கினர். அப்போது, நிலத்தை உயிரே போனாலும் ஒப்படைக்க மாட்டோம். மாற்று வழியாக கால்வாய் அமைக்கும் பணியை மேற்கொள்ள, தெரிவித்தனர்.
தர்மபுரியின் துாள்செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு சென்றால், அம்மாவட்டத்திலுள்ள பல ஏரிகள் மட்டுமின்றி, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, தேன்கனிக்கோட்டை தாலுகாவிலுள்ள, 12 ஏரிகள் நிரம்பும் என, நீர்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

