/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பச்சை நிற கண்ணாடி மணி அகழாய்வில் கண்டெடுப்பு
/
பச்சை நிற கண்ணாடி மணி அகழாய்வில் கண்டெடுப்பு
PUBLISHED ON : பிப் 20, 2025 12:00 AM

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல் குளம் மூன்றாம் கட்ட அகழாய்வில் அகெட் எனப்படும் கல்மணி, பச்சை நிற கண்ணாடி மணி, சுடுமண் ஆட்டக்காய், சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டது.
இங்கு நடக்கும் மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 20 குழிகளில் உடைந்த நிலையில் சுடு மண் உருவ பொம்மை, தங்க மணி, சூது பவள மணி உள்ளிட்ட 3600க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அகெட் எனப்படும் கல்மணி, பச்சை நிற கண்ணாடி மணி, சுடுமண் ஆட்டக்காய், சங்கு வளையல் தற்போது கண்டெடுக்கப்பட்டது.
அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், முன்னோர்கள் தொழிற் கூடம் நடத்தி, வாழ்ந்ததற்கு சான்றாக அதிக சங்கு வளையல்கள் கிடைக்கின்றன. அலங்காரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். அந்த வகையில் அகெட் எனப்படும் விலை மதிப்பு மிக்க கல் மணி, பச்சை என்கிற கண்ணாடி மணி கிடைத்துள்ளது. பொழுதுபோக்கிலும் ஈடுபட்டதற்குச் சான்றாக சுடுமண் ஆட்டக்காய் கிடைத்துள்ளது என்றார்.

