sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

கிராம சபை தீர்மானத்தை மதிக்காத வன அதிகாரிகள்!

/

கிராம சபை தீர்மானத்தை மதிக்காத வன அதிகாரிகள்!

கிராம சபை தீர்மானத்தை மதிக்காத வன அதிகாரிகள்!

கிராம சபை தீர்மானத்தை மதிக்காத வன அதிகாரிகள்!


PUBLISHED ON : டிச 17, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : டிச 17, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''கழிப்பறையில் குடும்பத்தோட குடியிருக்காங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.

''அடப்பாவமே... யாரு வே அது...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.

''சென்னை மாநகராட்சி,110வது வார்டு, ஆயிரம்விளக்கு தொகுதியில் வர்றகாமராஜபுரத்துல மாநகராட்சியின் கழிப்பறை இருக்கு... அந்த கழிப்பறை கட்டடத்தையே வீடா மாத்தி ஒரு ஏழை தம்பதி வசிக்கிறாங்க... அங்கயே அடுப்பும் வச்சு சமையல் பண்ணி சாப்பிடுறாங்க...

''அந்த தம்பதிக்கு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துலஒரு வீடு ஒதுக்கி தராம அப்படியே விட்டு வச்சிருக்காங்க... அந்தவார்டு தி.மு.க., கவுன்சிலரா இருக்கிற சிற்றரசு, ஆளுங்கட்சியின்மேற்கு மாவட்ட செயலராகவும் இருக்காருங்க...

''உதயநிதியின் வலதுகரமாகவே வலம் வர்ற இவர், வார்டுல நடக்கிற எந்த பிரச்னைகளையும் கண்டுக்கிறது இல்ல... இது சம்பந்தமா, முதல்வரின் தனிப்பிரிவுக்கு பலர் புகார் அனுப்பியும், பலன் இல்லைங்க...

''இப்ப, கழிப்பறையிலவசிக்கிற தம்பதியை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்கள்ல சிலர் பதிவிட்டும், மாநகராட்சியோ, கவுன்சிலரோ ஒரு துரும்பை கூட கிள்ளி போடலைங்க...'' என்றார்,அந்தோணிசாமி.

''பழைய, 'சரக்கு'களைதலையில கட்டுதாவ வே...''என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''சேலம் மாவட்டத்தில்,191 டாஸ்மாக் கடைகள்இருக்கு... கூடுதல் விலைக்குவிற்பதை தடுக்க, 'க்யூ.ஆர்., கோடு' மது பாட்டில்கள் சீக்கிரமே விற்பனைக்கு வரப் போகுது வே...

''அதை ஸ்கேன் செஞ்சா,ஒரிஜினல் விலை பிரின்ட்ஆகி வந்துடுமாம்... 'அதன்பிறகு கூடுதல் விலைக்கு யாரும் விற்க முடியாது'ன்னு டாஸ்மாக் அதிகாரிகள் சொல்லுதாவ வே...

''பொதுவா, ஒரு கடையில், 15 நாட்களுக்குதேவையான சரக்குகள் இருப்பு இருக்கும்... சீக்கிரமே க்யூ.ஆர்., கோடுமது பாட்டில்கள் வர இருக்கிறதால, கடையில்இருப்புல இருக்கிற பழையமது பாட்டில்களை சீக்கிரம் காலி பண்ணும்படி அதிகாரிகள் உத்தரவுபோட்டிருக்காவ வே...

''இதுக்காக, குடோன்கள்ல இருந்து சரக்கு அனுப்புறதையும் குறைச்சுட்டாவ... இதனால, 'குடி'மகன்கள்விரும்பாத மதுபானங்களை எல்லாம் கடை ஊழியர்கள், வம்படியா அவங்க தலையில கட்டிட்டு இருக்காவ வே...''என்றார், அண்ணாச்சி.

''கண்டன தீர்மானத்தைகண்டுக்கவே இல்ல பா...''என்றார், அன்வர்பாய்.

''என்ன விவகாரம் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.

''நீலகிரி மாவட்டம், முதுமலை, மசினகுடி ஊராட்சியில் போன மாசம் நடந்த கிராம சபைகூட்டத்துல, பல தீர்மானங்களை நிறைவேத்தினாங்க... இதுல, மக்கள் மேம்பாட்டுக்காக உள்ள வனச்சட்டங்களை செயல்படுத்தாத மசினகுடி வன அதிகாரி, அவருக்கு உடந்தையா இருக்கும் வன பாதுகாவலர் ஆகியோரை கண்டிச்சு தீர்மானம் போட்டாங்க பா...

''அதோட, இது சம்பந்தமா விசாரணை நடத்தி, அவங்களை இடமாறுதல் செய்யணும்னும் தீர்மானம் நிறைவேற்றி, வனத்துறைக்கு பரிந்துரை செஞ்சாங்க... ஆனா, இந்த தீர்மானங்களை வனத்துறை உயர் அதிகாரிகள் கண்டுக்கவே இல்ல...

''இதனால, கிராமசபை கூட்டத்துல, அந்தஅதிகாரிகளுக்கு எதிராகமீண்டும் கண்டன தீர்மானம் போட்டு, மறுபடியும் அனுப்பி வச்சிருக்காங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.

அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.






      Dinamalar
      Follow us