தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ செங்கையில் திருநங்கையருக்கு இலவச வீட்டுமனை பட்டா

செங்கையில் திருநங்கையருக்கு இலவச வீட்டுமனை பட்டா

செங்கையில் திருநங்கையருக்கு இலவச வீட்டுமனை பட்டா


PUBLISHED ON : மே 27, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 27, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செங்கல்பட்டு, செங்கல்பட்டில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைள் அடங்கிய, 429 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்து.

சப் - கலெக்டர் மாலதி ெஹலன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் நரேந்திரன், உதவி ஆணையர் ராஜன்பாபு, மாவட்ட வழங்கல் அலுவலர் சாகிதா பர்வின் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதில் இலவச வீட்டுமனை பட்டா, விவசாய கிணறு மின் இணைப்பு, சாலை வசதி, தமிழக வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு ஒதுக்கீடு உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 429 மனுக்கள் வரப்பெற்றன.

இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க, அனைத்து துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார். அதன் பின், மாவட்டத்தில் திருநங்கையர், இலவச வீட்டுமனை பட்டா கோரி மனு அளித்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து, திருநங்கையர் 26 பேருக்கு, 3.5 கோடி ரூபாய் மதிப்புள்ள இலவச வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், ஆறு மாற்றுத்திறனாளிகளுக்கு, 5.69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 'பேட்டரி'யால் இயங்கும் மடக்கு சக்கர நாற்காலி உள்ளிட்டவற்றை, கலெக்டர் வழங்கினார்.

* கோரிக்கை

செய்யூர் அடுத்த, சேம்புலிபுரம் கிராமத்தைச் சேர்ந்த கர்ணன் என்பவர், கலெக்டரிடம் அளித்த மனு:

செய்யூர் அடுத்த சேம்புலிபுரம் கிராமத்தில், 15 ஆதிதிராவிட பெண்கள், மகளிர் சுய உதவிக்குழு வாயிலாக தையல் பயிற்சி முடித்துள்ளனர். இவர்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளனர். இவர்களின் வாழ்வாதார நலன் கருதி, ஆதிதிராவிடர் நலத்துறை வாயிலாக, இலவச தையல் இயந்திரம் வழங்க வேண்டும்.

இவ்வறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மீது விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க, ஆதிதிராவிடர் நலத்துறைக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us