/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
சிறுமியிடம் அத்துமீறிய ஏழு பேர் கும்பல் கைது
/
சிறுமியிடம் அத்துமீறிய ஏழு பேர் கும்பல் கைது
PUBLISHED ON : மார் 13, 2024 12:00 AM
திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலைச் சேர்ந்த, 17 வயது சிறுமி, பாலிடெக்னிக் கல்லுாரியில், 2ம் ஆண்டு படிக்கிறார். கடந்த, 9ம் தேதி வெள்ளக்கோவில் தேர்த்திருவிழாவின் போது நடந்த கலைநிகழ்ச்சியை பார்க்க சென்றார்.
சிறுமியிடம் பேசிய இருவர், 'நீங்கள் நடனம் நன்றாக ஆடுகிறீர்கள்; யு-டியூப்பில் வீடியோ எடுத்து போடுகிறோம்' என கூறி, சிறுமியை நம்ப வைத்து அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர்.
இதையறிந்த, பிற ஐந்து பேர், சிறுமியை அழைத்துச் சென்று, கூட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். மகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோருக்கு தெரிய வந்தது. இதுகுறித்து புகாரின்படி, காங்கேயம் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர்.
சிறுமியிடம் கூட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பாக, வெள்ளக்கோவில் வட்டாரத்தைச் சேர்ந்த 26 - 32 வயதுடைய ஏழு பேரை 'போக்சோ' வழக்கில் கைது செய்தனர்.

