sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

மயிலை ரயில் நிலையத்தில் அரசு பஸ் நடத்துநர் கொலை

/

மயிலை ரயில் நிலையத்தில் அரசு பஸ் நடத்துநர் கொலை

மயிலை ரயில் நிலையத்தில் அரசு பஸ் நடத்துநர் கொலை

மயிலை ரயில் நிலையத்தில் அரசு பஸ் நடத்துநர் கொலை


PUBLISHED ON : டிச 11, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : டிச 11, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை மயிலாப்பூர் மேம்பால ரயில் நிலையத்தில், அரசு போக்குவரத்துக் கழக நடத்துநரை கீழே தள்ளி கொலை செய்த மர்மநபரை, போலீசார் தேடி வருகின்றனர்.

மயிலாப்பூர் மேம்பால ரயில் நிலையத்தில் 'எஸ்கலேட்டர்' எனும் நகரும் படிக்கட்டு அருகே, நேற்று முன்தினம் இரவு, தலையில் பலத்த காயத்துடன், எவ்வித அசைவுமின்றி ஒருவர் கிடந்தார்.

பயணியர் கொடுத்த தகவலை அடுத்து, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சோதனை செய்தனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.

அவரது சட்டை பையில் இருந்த அடையாள அட்டையை பார்த்தபோது, அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து வரும் குப்புசாமி, 48, என்பது தெரிய வந்தது.

திருவான்மியூர் ரயில்வே போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சியை ஆய்வு செய்ததில், மதுபோதையில் இருந்த குப்புசாமியிடம், மர்மநபர் ஒருவர் தகராறில் ஈடுபட்டதும், அவரை கீழே தள்ளிவிட்டத்தில் தலையில் அடிபட்டு இறந்ததும் தெரிய வந்தது. போலீசார் வழக்கு பதிந்து, தப்பிய கொலையாளியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us