/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கோரிக்கை 'பேட்ஜ்' அணிந்து அரசு டாக்டர்கள் போராட்டம்
/
கோரிக்கை 'பேட்ஜ்' அணிந்து அரசு டாக்டர்கள் போராட்டம்
கோரிக்கை 'பேட்ஜ்' அணிந்து அரசு டாக்டர்கள் போராட்டம்
கோரிக்கை 'பேட்ஜ்' அணிந்து அரசு டாக்டர்கள் போராட்டம்
PUBLISHED ON : மே 16, 2025 12:00 AM

சென்னை:அரசு மருத்துவமனைகளில், நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களை நியமிக்க வலியுறுத்தி, 'பேட்ஜ்' அணிந்து அரசு டாக்டர்கள் பணியாற்றினர்.
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அனைத்து அரசு டாக்டர்களும் நேற்று, கோரிக்கை பேட்ஜ் அணிந்து மருத்துவ சேவையில் ஈடுபட்டனர். குறிப்பாக, ஊதிய உயர்வு, பதவி உயர்வு, அனுமதிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், இணை ஒருங்கிணைப்பாளர் ராமலிங்கம் ஆகியோர் கூறியதாவது:
கருணாநிதி ஆட்சி காலத்தில், அரசாணை-354 கொண்டு வரப்பட்டது. இதன்படி, டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் காலமுறை பதவி உயர்வு போன்றவை வழங்கப்பட வேண்டும். இந்த அரசு இதுவரை செயல்படுத்தவில்லை.
மேலும், அரசாணையில், 950 பேராசிரியர், இணை, உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது; அப்பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. பல ஆண்டுகளுக்கு முன் அனுமதிக்கப்பட்ட 20,000 என்ற எண்ணிக்கையே தற்போதும் தொடர்கிறது.
ஆனால், நோயாளிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது. தற்போது, நோயாளிகள் எண்ணிக்கை அடிப்படையில், 80,000 டாக்டர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.
மேலும், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களுக்கு படித்தொகையாக, 3,000 ரூபாய் வழங்கப்படும் என, அரசு உறுதி அளித்தும், இதுவரை நிறைவேற்றவில்லை. இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.