/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
தீயில் மாடுகளை இழந்த விவசாயிக்கு உதவி
/
தீயில் மாடுகளை இழந்த விவசாயிக்கு உதவி
PUBLISHED ON : டிச 10, 2024 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தீயில் மாடுகள் பலி: விவசாயிக்கு உதவி
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த பாலகுறி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மாணிக்கம். இவர் மாடுகளை வளர்த்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் இவரின் மாட்டு கொட்டகைக்கு தீ வைத்ததில், 2 மாடுகள் தீயில் கருகி இறந்தன.
தகவலறிந்த, கிருஷ்ணகிரி மாவட்ட காளை வளர்ப்போர் சங்க மாவட்ட தலைவரும், காவேரிப்பட்டணம், தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளருமான மகேந்திரன் ஆலோசனைபடி, செயலாளர் கிஷோர்குமார் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட மாணிக்கத்திற்கு, 40,000 ரூபாய் மதிப்பில் பசு மாடு ஒன்றை நேற்று வழங்கினர்.

