/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
தனுஷ்கோடியில் படகுகளில் அதிவேக இன்ஜின் பறிமுதல் தினமலர் செய்தி எதிரொலி

PUBLISHED ON : ஜூன் 11, 2025 12:00 AM

ராமேஸ்வரம்:தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக தனுஷ்கோடியில் இரு படகில் பொருத்தப்பட்டிருந்த அதிவேக இன்ஜின்களை மீன்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் இருந்து இலங்கை கடல் பகுதி 25 முதல் 40 கி.மீ.,ல் உள்ளது.
இதனால் மீனவர்கள் போர்வையில் கடத்தல்காரர்கள் சர்வ சாதாரணமாக ராமேஸ்வரம் பகுதியில் ஊடுருவுகின்றனர். பெரும்பாலும் நாட்டுப்படகு, பைபர் கிளாஸ் படகில் போதைப் பொருள், தங்கக் கட்டிகள் கடத்தப்படுகிறது.
இப்படகில் உள்ள வெளிநாட்டு நிறுவன இன்ஜின்கள் அதிக சத்தம் இன்றி, அதிவேகமாக செல்வதால் சாதகமாக உள்ளது. இதனால் இந்த ரக இன்ஜின் பொருத்திய படகிற்கு ராமேஸ்வரம் மீன்துறையினர் தடை விதித்தனர்.
ஆனால் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன் பகுதியில் 40க்கு மேற்பட்ட படகில் தடை செய்த இன்ஜின் இருந்தது.
இது குறித்து ஜூன் 7ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக நேற்று தனுஷ்கோடியில் படகுகளில் மீன்துறை உதவி இயக்குனர் தமிழ்மாறன் தலைமையில் ஆய்வு செய்தனர். இரு படகுகளில் பொருத்தப்பட்டிருந்த தடை செய்த இன்ஜினை பறிமுதல் செய்தனர்.