தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/உதவியாளர் நியமித்து உணவகங்களில் வசூலிக்கும் அதிகாரி!

உதவியாளர் நியமித்து உணவகங்களில் வசூலிக்கும் அதிகாரி!

உதவியாளர் நியமித்து உணவகங்களில் வசூலிக்கும் அதிகாரி!

1


PUBLISHED ON : அக் 03, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 03, 2026 12:00 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏ லக்காய் டீயை பருகியபடியே, ‘‘அண்ணாமலை ஆட்களையும் வளைக்க முயற்சி நடக்குது பா...’’ என, விவாதத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.

‘‘ஆளுங்கட்சியினரை சொல்றீங்களா...?’’ என கேட்டார் அந்தோணிசாமி.

‘‘ஆமா... பா.ஜ.,வுல இருந்து விலகி, ‘வீ த லீடர்ஸ்’ என்ற அமைப்பை அண்ணாமலை நடத்திட்டு இருக்காரே... இந்த அமைப்பில் பல லட்சம் பேர் சேர்ந்திருக்காங்க... இதுல, முக்கால்வாசி பேர் இளைஞர்கள் தான் பா...

‘‘இதுவரை, அ.தி.மு.க.,வுல இருந்து ஆட்களை துாக்கிட்டு இருந்த த.வெ.க., இப்ப அண்ணாமலை அமைப்புக்கும் குறி வச்சிருக்கு... அந்த கட்சியின் உயர்ந்த மனிதரான அமைச்சர் உத்தரவுப்படி, அவரது ஆதரவாளர்கள் களத்துல இறங்கியிருக்காங்க பா...

‘‘அண்ணாமலை அமைப்புல, மாவட்ட வாரியா துடிப்பா செயல்படும் இளைஞர்களிடம், ‘வர்ற உள்ளாட்சி தேர்தல்ல போட்டியிட வாய்ப்பு தர்றோம்... கட்சியிலும் பதவிகள் தரப்படும்’னு துாண்டிலை வீசுறாங்க... பலர், ‘நாங்க பதவிக்கு ஆசைப்பட்டு கட்சி தாவ மாட் டோம்’னு மறுத்துட்டாலும், அமைச்சர் தரப்பின் முயற்சிகள் தொடருது பா...’’ என்றார் அன்வர்பாய்.

‘‘ஆதவ், தள்ளி உட்காரும்...’’ என்ற பெரியசாமி அண்ணாச்சியே, ‘‘லட்சக்கணக்கில் வசூல் பண்ணிட்டாவ வே...’’ என்றபடியே தொடர்ந்தார்...

‘‘பெரம்பலுார் மாவட்டத்துல, 360 அரசு பள்ளிகள் இருக்கு... என்.சி.சி., ‘ஸ்கவுட்’னு மாணவர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாதுன்னு, பள்ளிகளுக்கு சிறப்பு கட்டணம் மற்றும் பராமரிப்பு தொகை எல்லாம் அரசே தருது வே...

‘‘ஆனாலும், ஆறு – எட்டாம் வகுப்பு மாணவர்களிடம் தலா 400, ஒன்பது – 10ம் வகுப்பு மாணவர்களிடம் தலா 500, பிளஸ் 1 – பிளஸ் 2 மாணவர்களிடம் தலா 600 ரூபாயை கல்விக் கட்டணமா வாங்கியிருக்காவ... இப்படி 15 ஆயிரம் மாணவ – மாணவியரிடம் வசூல் பண்ணியிருக்காவ வே...

‘‘இதுக்கு எந்த ரசீதும் தரல... மாணவர்களிடம் வசூல் செய்த பணத்துடன், அரசு வழங்கிய சிறப்பு கட்டணம், பள்ளி பராமரிப்பு தொகைன்னு எல்லாத்தையும், தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரி கள் சேர்ந்து, பொய் கணக்கு எழுதி பங்கு போட்டுக்கிட்டாவ வே...’’ என்றார் பெரியசாமி அண்ணாச்சி.

‘‘எங்கிட்டயும் ஒரு வசூல் மேட்டர் இருக்கு ஓய்...’’ என்றார் குப்பண்ணா.

‘‘சீக்கிரம் சொல்லுங்க பா...’’ என்றார் அன்வர்பாய்.

‘‘மதுரையில், உணவு பாதுகாப்பு துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரி, ஹோட்டல்கள் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிக்கற நிறுவனங்களை மிரட்டி பணம் பறிக்கறார்... அடிக்கடி ஆய்வுக்கு போறவர், எதையாவது குறை கண்டுபிடிக்கறார் ஓய்...

‘‘அப்பறமா, ‘இதுக்கு அபராதம் போட்டா இவ்வளவு தொகை கட்டணும்... அதுக்கு பதிலா எனக்கு இவ்வளவு தந்துடுங்கோ’ன்னு பகிரங்கமாவே பேரம் பேசறார் ஓய்...

‘‘நேர்மையா தொழில் பண்றவா, ‘நாங்க எதுவும் தர முடியாது’ன்னு மறுத்துட்டா, அவா தயாரிக்கற உணவுப் பொருட்களை, ‘சாம்பிள்’ எடுத்து, ஆய்வுக்கு அனுப்பி, ‘குறைகள் இருக்கு’ன்னு அறிக்கை வாங்கி, அதை வச்சு மிரட்டறார்... இந்த, ‘டீலிங்’ மற்றும் வசூலுக்காகவே தனியா ஒரு உதவியாளரையும் வச்சிருக்கார் ஓய்...

‘‘அதிகாரி மற்றும் அவரது உதவியாளரை பத்தி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சிலர் புகார் அனுப்பியிருக்கா... என்னைக்கு வசமா சிக்கப் போறாங்கன்னு தெரியல ஓய்...’’ என முடித்தார் குப்பண்ணா.

‘‘காசிம், இங்கன உட்காரும்... உம்ம நண்பர் சுந்தர் இப்ப தான் போனாரு வே...’’ என்றபடியே பெரியசாமி அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us