/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கோனேரிகுப்பத்தில் நாய் தொல்லை அதிகரிப்பு
/
கோனேரிகுப்பத்தில் நாய் தொல்லை அதிகரிப்பு
PUBLISHED ON : ஏப் 04, 2025 12:00 AM

கோனேரிகுப்பம்:காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, மூவேந்தர் நகர் பிரதான சாலை வழியாக, வையாவூர், கோனேரிகுப்பம், ஏனாத்துார் உள்ளிட்ட பகுதிக்கு சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் நிறைந்த இச்சாலையில், 20க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. சாலையை மறித்து நிற்கும் நாய்களால், இத்தெரு வழியாக பள்ளி செல்லும் மாணவ - -மாணவியர், பெண்கள், முதியோர், அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
இருசக்கர வாகனத்தில் செல்வோரை குரைத்தபடியே நாய்கள் விரட்டி செல்கின்றன. குப்பையில் கிடக்கும் உணவுக்காக சண்டையில் ஈடுபடும் நாய்களால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
நாய் தொல்லையால், இப்பகுதியில் வசிப்போர் தெருவில் நடமாட அச்சப்படுகின்றனர். குறிப்பாக பணி முடிந்து, இரவு 10:00 மணிக்கு மேல் வீடு திரும்புவோர் நாய் கடிக்கு பயந்தபடியே வீட்டிற்கு செல்ல வேண்டிய பரிதாப நிலை உள்ளது.
எனவே, கோனேரிகுப்பம், மூவேந்தர் நகரில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.