PUBLISHED ON : டிச 22, 2024 12:00 AM

திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், சென்னை பூந்தமல்லியில் நடந்தது. இதில், தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நாசர் பங்கேற்றார்.
அப்போது பேசுகையில், 'சினிமாவில் சோல்டு அவுட் ஆகும் நடிகையர் விளம்பரத்துக்கும், நடிகர்கள் அரசியலுக்கும் வருகின்றனர். இப்படி வந்த நடிகர் ஒருவர், நான் தான் அடுத்த முதல்வர் என்கிறார். அவர் தொகுதிக்கு, 2,000 ஓட்டு வாங்கினால் அதிகம். அந்த நடிகர் எங்களை பார்த்து குறை சொல்கிறார்' என்றார்.
பார்வையாளர் ஒருவர், 'இவர் சோல்டு அவுட் நடிகர்னு விஜயை தான் சொல்றாரா...?' என முணுமுணுக்க, மற்றொருவர், 'இவங்க இளம் தலைவரும் சினிமாவில் இருந்து வந்தவர் தானே... விஜயை திட்டுறசாக்குல உதயநிதியையும் சேர்த்து தாக்குறாரோ...?' என, 'கமென்ட்' அடித்தபடியே கிளம்பினார்.