/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
போலீசாருக்கு மிரட்டல் விடுத்த சிறை கைதிகள்
/
போலீசாருக்கு மிரட்டல் விடுத்த சிறை கைதிகள்
PUBLISHED ON : மார் 14, 2024 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல்:புழல் தண்டனை சிறையில், நேற்று முன்தினம் சிறை போலீசார் வழக்கம்போல் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, கழிப்பறை மற்றும் குடிநீர் குழாய் மோட்டாருக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு மொபைல் போன்கள் சிக்கின.
இது குறித்து, அவர்கள் அங்குள்ள கைதிகளிடம் விசாரித்தபோது, இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சிறை கைதிகள் போலீசாரை மிரட்டினர்.
இது குறித்து கைதிகள் மோகன்குமார், 33, சரண், 26, மணிகண்டன், 23, பிரதீப், 25, நாயக், 27, ஆகியோர் மீது, சிறை அலுவலர், புழல் போலீசில் புகார் செய்தார்.
போலீசார், மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

