/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
வரும் வாரங்களில் முன்னேற வாய்ப்புள்ளது
/
வரும் வாரங்களில் முன்னேற வாய்ப்புள்ளது
PUBLISHED ON : டிச 31, 2025 01:45 AM

வெள்ளியின் விலையில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் ஆண்டின் இறுதி என்பதாலும், இந்திய ரூபாய் மதிப்பில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை.
வெள்ளியின் விலை மிக வேகமாக உயர்ந்ததை தொடர்ந்து, சந்தை ஒழுங்குமுறை அமைப்பான சி.எம்.இ., அதன் வர்த்தகத்துக் கான மார்ஜின் தொகையை உயர்த்தியது.
இதனால், வெள்ளியின் விலை அதன் உச்சத்திலிருந்து 13 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை விலையில் இருந்து மட்டும் 7 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
சந்தையில் வர்த்தகம் குறைவாக இருக்கும்போது, அதீத உற்சாகத்துடன் முதலீடு செய்வது ஆபத்தானது என்பதை இது உணர்த்துகிறது.
கடந்த மூன்று நாட்களாக சரிந்து வந்த இந்திய ரூபாய், இன்று சற்று முன்னேற்றம் கண்டுள்ளது. எனினும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறுவது ரூபாய்க்கு சவாலாகவே உள்ளது.
இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி நவம்பர் மாதத்தில் 6.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, கடந்த 13 மாதங்களில் இல்லாத அதிவேக வளர்ச்சியாகும். குறிப்பாக, உற்பத்தி் துறை 8 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.
அமெரிக்காவின் வரி விதிப்பு கொள்கைகள், இந்திய வளர்ச்சியை பாதிக்கும் என்ற அச்சத்தை போக்கும் வகையில் இந்த தரவுகள் அமைந்துள்ளன. இது ரூபாய்க்கு ஒரு பிடிமானத்தை கொடுத்துள்ளது.
ஆண்டின் இறுதி என்பதால் சந்தையில் பணப்புழக்கம் குறைவாக இருக்கும். இதனால், சிறிய முதலீட்டு மாற்றங்கள்கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 89.30 முதல் 90.20 என்ற எல்லைக்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூபாயின் மதிப்பு 89.30-க்கு கீழே வலுவடைந்தால், வரும் வாரங்களில் 88.50 வரை முன்னேற வாய்ப்புள்ளது.

