/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
போலீசுக்கு 'தண்ணி' காட்டியவர் சிக்கினார்
/
போலீசுக்கு 'தண்ணி' காட்டியவர் சிக்கினார்
PUBLISHED ON : ஜூன் 19, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.பி., சத்திரம், கீழ்ப்பக்கம் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ், 25. இவரை, கடந்த 2014ல் ஜூன் 12ம் தேதி, கத்தியால் குத்திவிட்டு நால்வர் தப்பினார். டி.பி.,சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து, சேப்பாக்கத்தைச் சேர்ந்த சிவகுமார், 45, என்பவர் உட்பட நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு, எழும்பூர் ஐந்தாவது நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிமன்ற பிணையில் வெளிவந்த, சிவகுமார் ஐந்து ஆண்டுகளாக ஆஜராகாமல் இருந்துள்ளார். இதையடுத்து, பிப்., 13ம் தேதி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. தலைமறைவாக இருந்த சிவகுமாரை, டி.பி.,சத்திரம் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.