/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மருதம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் சாதனை
/
மருதம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் சாதனை
மருதம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் சாதனை
மருதம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் சாதனை
PUBLISHED ON : டிச 10, 2024 12:00 AM
மருதம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள்
விளையாட்டு போட்டிகளில் சாதனை
அரூர், டிச. 10-
-தமிழக அரசின், பள்ளி கல்வித்துறை சார்பில், தர்மபுரி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள், மொரப்பூர் மருதம் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
இதில், மொரப்பூர் மருதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் கபடி, எரிபந்து, பீச் வாலிபால், தடகளம் ஆகிய போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவியரை, மருதம் பள்ளி தலைவர் தவமணி, தாளாளர் திலகரசன், செயலாளர் அரவிந்த், பொருளாளர் சக்திவேல், போக்குவரத்து மேலாளர் நாகராஜ், பள்ளி முதல்வர் முஜீப்பாபு, துணை முதல்வர் ராமு, ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரி ஆகியோர் வாழ்த்தி பாராட்டினர்.
மேலும் சிறப்பாக பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேஷ், கார்த்திக், அகத்தியன் ஆகியோரை, ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் பாராட்டினர்.