/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மேட்டூர் அணை நீர்வரத்து 828 கனஅடியாக சரிவு
/
மேட்டூர் அணை நீர்வரத்து 828 கனஅடியாக சரிவு
PUBLISHED ON : ஜன 07, 2025 12:00 AM
மேட்டூர், மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று வினாடிக்கு, 828 கனஅடியாக சரிந்தது.
மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த, 31ல் அணை நீர்மட்டம், மூன்றாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியது. கடந்த, 3 முதல் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு, 12,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி யில் நீடிக்கும் கடும் வறட்சியால் நேற்று முன்தினம் வினாடிக்கு, 1,307 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று, 828 கனஅடியாக சரிந்தது. அதற்கேற்ப கடந்த, 2ல், 120 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று, 117.87 அடியாக சரிந்தது. நேற்று முன்தினம், 91.13 டி.எம்.சி.,
யாக இருந்த அணை நீர் இருப்பு நேற்று, 90.11 டி.எம்.சி.,யாக சரிந்தது. கடந்த, 4 நாட்களில் அணை நீர்மட்டம், 3 அடியும், நீர் இருப்பு, 3.5 டி.எம்.சி.,யும் சரிந்துள்ளது.

