தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/வேதங்களையும் மதம் மாற்றும் மிஷனரிகள்!

வேதங்களையும் மதம் மாற்றும் மிஷனரிகள்!

வேதங்களையும் மதம் மாற்றும் மிஷனரிகள்!

53


PUBLISHED ON : அக் 24, 2026 03:42 AM

Follow on GoogleFavourite on Google

53

PUBLISHED ON : அக் 24, 2026 03:42 AM


53
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- அரவிந்தன் நீலகண்டன் -

மதமாற்றம் செய்வது தான், கிறிஸ்துவத்தின் தலையாயப் பணி. இதற்காக சர்ச்சுகளால் நியமிக்கப்பட்டவர்கள் தான், 'ஊழியக்காரர்கள்!' மதமாற்றத்திற்காக கிறிஸ்துவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகள், 'சுவிசேஷ' கூட்டங்கள் என அழைக்கப்படுகின்றன.

சில சமயங்களில், சிறப்பு பலி, ஆராதனை என்ற பெயர்களில் இந்த மதமாற்றக் கூட்டங்கள் நடக்கும். இதற்கு முன் நமக்கு பரிச்சயம் இல்லாத பெயர்களில் மதமாற்றத்தை நடத்தி வந்த கிறிஸ்துவக் கும்பல்கள், தற்போது இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் நெருக்கமான சொல்லாடல், அதிகம் காதில் கேட்கப்பட்ட சமஸ்கிருத மந்திரங்களை பயன்படுத்தி, மதமாற்றம் செய்ய ஆரம்பித்து இருக்கின்றன.

உதாரணத்திற்கு தமிழகத்தின் நெல்லை, கன்னியாகுமரி, துாத்துக்குடி போன்ற மாவட்டங்களுக்குச் சென்று, 'வேதம்' என சொல்லி பாருங்கள். உடனே அங்குள்ள பெரும்பாலான மக்களின் நினைவுக்கு வருவது பைபிளாக தான் இருக்கும்.

'பிரஜாபதி'


அந்த அளவுக்கு ஹிந்துக்களுக்கு மட்டுமே சொந்தமான ரிக், யஜுர், சாம, அதர்வண என்ற நான்கு வேதங்களையும், கிறிஸ்துவர்கள் தங்களுக்கு சொந்தமான வார்த்தையாக மாற்றிக்கொண்டனர். இப்போது, அன்னிய மதத்திற்கு மாறினால் ஏற்படும் குற்ற உணர்ச்சியைப் போக்க, கூச்சமே இல்லாமல் இயேசு, வழிபாட்டை ஆதியில் ரிஷிகளும், முனிவர்களும் பின்பற்றியதாக பொய்யான ஒரு கட்டமைப்பை கிறிஸ்துவ மிஷனரிகள் உருவாக்கி இருக்கின்றன.

இதற்காகவே, தமிழகத்தில் உள்ள பல சர்ச்சுகளில் சமீபகாலங்களாக, 'பிரஜாபதி' என்ற ஹிந்துக்களின் சொல் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஹிந்துக்களின் ரிக் மற்றும் யஜுர் வேத காலங்களில், 'பிரஜாபதி' என்ற பெயர், படைப்பு கடவுளான பிரம்மனை குறிப்பதாக இருந்தது. தவிர, சில புராண ஹிந்து நுால்களும், 'பிரஜாபதியே பிரம்மன்' என குறிப்பிடுகிறது.

ஆனால், நீங்கள் சாதாரண கிறிஸ்துவ மதபிரசாரகரிடம் சென்று பிரஜாபதி யார் என கேட்டால், தயக்கமே இல்லாமல் அவர், 'இயேசு தான் பிரஜாபதி' என அடித்து கூறுவார். போதாக்குறைக்கு ஹிந்துக்களின் வேத நுால்களையும் துணைக்கு இழுத்து காட்டுவார். ஹிந்துக்களின் அடிப்படை கோட்பாடுகள் அப்படியே கிறிஸ்துவ மயமாக்குவதற்கு, அரசியல் ரீதியான வழிகளையும் கிறிஸ்துவ மிஷனரிகள் மிக சாமர்த்தியமாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன.

'ஓம் ஷலோம்' என்ற இசை நாடகங்களை கிறிஸ்துவ மிஷனரிகள் நடத்தி வருகின்றன. இதில் பிரபல திரைப்பட நடிகர், 'நிழல்கள்' ரவி நடித்து வருகிறார். இத்தனைக்கும் இவர், பாரம்பரிய வைஷ்ணவ குடும்பத்தை சேர்ந்தவர். இந்த இசை நாடகத்தின் தலைப்பு ஏதோ ஒரு கலாசார உரையாடல் போல தோன்றினாலும், உண்மையில் ஹிந்து மதத்தின், 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தையும், 'பிரஜாபதி' என்பவர் இயேசுவே என்ற கருத்தையும் துாக்கி பிடிக்கிறது. அதாவது ஹிந்துக்களின் வேத குறியீடுகளைக் கொண்டு, அவர்களின் ஆழமான நம்பிக்கைகளை திசை திருப்பும் முயற்சியாகவே இந்த நாடகம் நடத்தப்படுகிறது.

பம்மாத்து வேலை


'ஓம் ஷலோம்' நாடகக் குழுவினருக்கு பக்கபலமாக இருக்கும் தி.மு.க., முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ், பீஹாரில், 'ஜெம்ஸ்' என்ற கிறிஸ்துவ மிஷனரி நடத்தி வரும் பாஸ்டர் அகஸ்டின் ஜெபகுமாருக்கு உதவி வருகிறார். இதன் மூலம், வடமாநிலங்களிலும், 'வேத இயேசு' பிரசாரத்தைக் கொண்டு செல்வதற்கான திட்டங்களுக்கு, சத்தமின்றி அரசியல் பலமும் பயன்படுத்தப்படுகிறது.

தற்போதைய த.வெ.க., - எம்.எல்.ஏ.,வும் தமிழக சபாநாயகருமான ஜே.சி.டி. பிரபாகர், இயேசுவை வேத கால பிரஜாபதியாக சித்தரிக்கும், 'பிரஜாபதி' திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டிருக்கிறார். 19ம் நுாற்றாண்டில் கிறிஸ்துவ மிஷனரிகள் உருவாக்கிய, 'நிறைவேற்று கோட்பாடு' அடிப்படையிலேயே இந்த பிரஜாபதி இயேசு கோட்பாடும் உருவாக்கப்பட்டுள்ளது.

ஹிந்துக்கள் போற்றும் வேதங்களில் இயேசு பற்றி எந்தவொரு ஆதாரத்தையும், கிறிஸ்துவர்களால் மேற்கோள் காட்ட முடியாது. இதனால், போலியான சமஸ்கிருத மந்திரங்களையும் கிறிஸ்துவ மதபிரசாரகர்கள் தற்போது உருவாக்க ஆரம்பித்து விட்டனர். ஹிந்து மதத்தின் உயிரோட்டமான உருவ வழிபாடு, கோவில் ஆகமங்கள், பக்தி இலக்கியங்கள், புராணங்கள் ஆகியவை முறைகேடானவை என சித்தரிக்கப்படுகின்றன.

வேதங்களை கிறிஸ்துவமயமாக்கும் பம்மாத்து வேலை காலனி ஆதிக்க காலத்திலேயே தொடங்கப்பட்டு விட்டது. தற்போது, வெகுஜன ஊடகங்கள் வழியாக தீவிரமான மதமாற்ற பிரசாரமாக உருவெடுத்துள்ளது. சாது செல்லப்பா போன்ற சுவிசேஷ பிரசாரகர்கள், பிராந்திய கட்சிகளின் ஆதரவுடன், 'பண்டைய வேதங்களில் கிறிஸ்து' என்ற பெயரில் துண்டு பிரசுரங்களை வினியோகித்து வருகின்றனர்.

இயேசுவை ஏற்பது தான் இறுதியான வழி என ரிஷிகள் வேதங்களில் மறைபொருளாக சொல்லி இருப்பதாக பொய் கூறி, ஹிந்துக்களை மதம் மாற்றுவதற்கான உளவியல் தடைகளை உடைக்கும் வேலைகள், திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகின்றன.

பொய் பிரசாரம்


கிறிஸ்துவ மிஷனரிகளின் இந்த விஷமத்தனத்தை உடனடியாக நிறுத்த வேண்டியது அவசியம். குறிப்பாக வேத பண்பாட்டை சிதைக்கும் முயற்சிகளை தடுக்க வேண்டும்.

* ஹிந்து பண்பாடு, பாரம்பரியத்தின் ஆணிவேரான ரிஷிகளின் பரந்த பார்வையைச் சுருக்கி, 'பாவத்திற்காக ரத்த பலி கொடுத்தல்' என்ற கிறிஸ்துவ கோட்பாட்டிற்குள் அடைத்து, நம் ஆன்மிக தனித்துவத்தை அழிக்க பார்க்கின்றனர்

* வேதங்கள் என்பது ஏதோ முழுமை பெறாத ஆரம்பக்கட்ட உள்ளூர் நுால்கள் மட்டுமே என்ற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. 'யூதர்களுக்கு இறை துாதர்கள் மூலமும், இந்தியர்களுக்கு ரிஷிகள் மூலமும் கடவுள் பேசினார்; ஆனால், இந்த இரு வழிகளும் சிலுவையில் தான் முடிகின்றன' என்று கூறி வேதங்களை கிறிஸ்தவத்தின், 'பழைய ஏற்பாடு' நிலைக்கு தள்ளுகின்றனர்

* ஆதியில் வேதங்கள் ஒரே தெய்வ வழிபாட்டை மட்டுமே கொண்டிருந்தன என்றும்; பின்னாளில் இவை சீரழிக்கப்பட்டு விட்டன என்றும் பொய்யாக பிரசாரம் செய்யப்படுகிறது.

கிறிஸ்துவ மிஷனரிகளின் இந்த பொய்யான பிரசாரங்களை தடுக்க, நம் பாரம்பரியம் மற்றும் வேதங்களின் உண்மையான தத்துவார்த்த ஆழத்தை இளைய தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்.

கலாசாரத் திருட்டை சட்ட ரீதியாகவும் அறிவுப்பூர்வமாகவும் எதிர்த்து நிற்க வேண்டும். அப்போது தான், இந்தப் பண்பாட்டுத் தாக்குதலை எதிர்கொள்ள முடியும். இல்லாவிட்டால், ஹிந்து மதத்தின் விசேஷமான ஆன்மிக அடையாளங்கள் அனைத்தும் அன்னிய மதத்தினர் சொந்தம் கொண்டாடி சின்னாபின்னமாக்கி விடுவர்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us