PUBLISHED ON : நவ 30, 2025 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், அம்மாபேட்டை வித்யா நகரை சேர்ந்தவர் செல்வராஜ், 74. சிங்கமெத்தை பகுதியில் நேற்று முன்தினம் மதியம், சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, 'ஆக்டிவா' மொபட்டில் வந்த, 2 பேர், செல்வராஜை பார்த்து, 'ஓரமாக செல்ல முடியாதா' என கூறினர். இப்படி முதியவரின் கவனத்தை திசை திருப்பி, மொபட்டில் வந்தவர்கள், செல்வராஜ் பாக்கெட்டில் இருந்த, 'ஓப்போ' மொபைல் போனை, 'நைசாக' எடுத்தனர். அதை செல்வராஜ் கவனித்துவிட, மொபட்டில் வந்தவர்கள் தப்பினர். செல்வ
ராஜ் விரட்டியும் பயனில்லை. பின் அவர் புகார்படி, அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

