/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு பேரணி
/
தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு பேரணி
PUBLISHED ON : டிச 10, 2024 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, டிச. 10-
கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், உலக நுகர்வோர் தினம் மற்றும் தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு பேரணி துவங்கியது.
பேரணியை கலெக்டர் சரயு கொடியசைத்து துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே துவங்கிய விழிப்புணர்வு பேரணி, பெங்களூரு சாலை, ராயக்கோட்டை சாலை வழியாக, அரசு மகளிர் கலைக்கல்லுாரியை சென்றடைந்தது. மாவட்ட வழங்கல் அலுவலர் கீதாராணி, சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன், உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் 250க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டனர்.