sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/கட்டுமான பூச்சுக்கு சிமென்ட் கலவை எப்படி இருக்க வேண்டும்

கட்டுமான பூச்சுக்கு சிமென்ட் கலவை எப்படி இருக்க வேண்டும்

கட்டுமான பூச்சுக்கு சிமென்ட் கலவை எப்படி இருக்க வேண்டும்


PUBLISHED ON : மே 22, 2021 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 22, 2021 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கட்டுமான பொருட்களில் முக்கிய பங்கு வகிக்கும் சிமென்ட் வைத்து கலவை தயாரிப்பதில் சில முறைகள் உள்ளன.

கான்கிரீட் கலவைக்கு சிமென்ட், மணல், ஜல்லி 1:2:4 விகிதத்தில் கலக்க வேண்டும். சிமென்டில் பாதி தண்ணீர் சேர்க்க வேண்டும். அதே நேரம் பூச்சு கலவை தயாரிக்கும் போது 1:4 விகிதம் இருக்க வேண்டும். ஒரு மூடை சிமென்ட்டுக்கு 4 மூடை மணல் கலவை இருக்க வேண்டும். இப்படி கலக்கும் போது மென்மையாக இருக்கும். இது மேல் பூச்சுக்கு ஏற்றது. வெளிப்பூச்சுக்கு 1:5 விகிதத்தில் கலக்க வேண்டும். இது வெளிப்புறப் பூச்சுக்கு ஏற்றது.

சிமென்ட் பூச்சிலும் சில முறைகள் உள்ளன. எல்லா பகுதிகளிலும் ஒரே மாதிரி இருக்க கூடாது. வெளி, உள் சுவர்களுக்கு ஏற்ப சிமென்ட், மணல் விகிதம் வித்தியாசப்படும். ஒரு கட்டடத்தின் உள்புற சுவரின் பூச்சு வெளிப்புற சுவரின் பூச்சைவிட அதிக தரத்தில் அமைய வேண்டும். வெளிப்புற சுவர் சொரசொரப்பாக இருந்தால் போதும். ஆனால், உள்புறம் மென்மையாக இருக்க வேண்டும். அதற்கு ஏற்ப மணல், சிமென்ட் கலந்து கான்கிரீட் தயாரிப்பர்.

பூச்சு தடிமன் இருந்தால் பாதிப்பு

உள் சுவர் பூச்சுக்கு சிமென்ட் ஒரு பங்கு என்றால் மணல் நான்கு பங்கு கலப்பதாக சொல்கிறார்கள். அதே நேரம் வெளிப்புற சுவர் பூச்சுக்கு சிமென்ட் ஒரு பங்கு கலக்கும் போது மணல் ஐந்து பங்கு கலக்க சொல்கிறார்கள். சுவர் மேல் கான்கிரீட்டால் பூசும் போது கவனம் அவசியம். அதிக தடிமன் பூசினால் சுவருக்கு பலம் என நினைக்க கூடாது. போதிய தடிமனைவிட அதிகம் பூச்சு இருந்தால் சுவருக்கு பாதிப்பு ஏற்படும். தடிமன் அதிகமானால் நாளடைவில் சுவரில் காற்று குமிழ்களால் விரிசல் விழும்.

ஹாலோ பிளாக், பிளை ஆஷ் கற்களில் கட்டும் சுவர் மேற்பரப்பு சுமார் 10 மி.மீ தடிமன் இருக்க வேண்டும். செங்கல் கொண்டு கட்டும் சுவருக்கு இதைவிட சிறிது அதிக தடிமன் பூச்சு அமையும். செங்கற்களின் மேற்பரப்பு மேடு பள்ளங்கள் கொண்டவையாக இருக்கும்போது தடிமன் சிறிது அதிகம் போடுவது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us