PUBLISHED ON : ஆக 28, 2021 12:00 AM
முன்பெல்லாம் நிலத்தின் அளவுகள் குழி, வேலி, மா என்ற பேச்சு வழக்கு, ஏக்கர், ஹெக்டேர் என்ற அளவீட்டு முறையில் குறிப்பிட்டனர். இப்போது வீட்டு மனைகளை சதுர அடியில் சொல்வது தான் நடைமுறை.
சென்னை போன்ற நகரங்களில் கிரவுண்டு என்கிறார்கள். மனை அளவு மாற்றலாம் வீட்டு மனை வாங்கும் போது சதுர அடி, சென்ட், கிரவுண்டு அளவு பயன்படுத்தப் படுகின்றன. ஒரு நிலம் சதுர அடி, சென்ட், கிரவுண்டு அளவில் இருக்கும் போது வேறு அளவாகமாற்றி அறிந்து கொள்வது எப்படி என பலருக்கு குழப்பம் இருக்கும். வீட்டு மனை அளவு சதுர அடியில் இருந்தால் சென்ட், சென்ட்டில் இருந்தால் சதுர அடியாக மாற்றலாம்.
முக்கோண மனை சிக்கல்
சம்பந்தப்பட்ட இடம் எவ்வகையாக இருந்தாலும் நான்கு எல்லைகள் இருக்கும். சில இடங்களில் ஐந்து, ஆறு பக்கங்கள் கொண்ட நிலங்கள் அல்லது மனைகள் இருப்பதும் உண்டு. சில இடங்களில் மூன்று பக்க அளவுகள் கொண்ட முக்கோண வடிவ மனைகளும் இருப்பதுண்டு. அதில் மொத்த அளவை கணக்கிடுவது சிக்கல் தான்.
நான்கு பக்க மனை அளவு
மனை அளவுகள் நான்கு பக்கங்களிலும் சமமாக இருந்தால் நீளம், அகலம் பெருக்கி வரும் அளவு தான் அதன் மொத்த அளவாகும். ஒரு மனை நீளத்தில் இரு புறங்களும் 50 அடிகள், அகலத்தில் இரு புறங்களிலும் 25 அடிகள் இருந்தால் அந்த மனையின் ஒட்டு மொத்த அளவானது 1250 சதுர அடி.மனை நான்கு பக்கங்களிலும் வெவ்வேறு அளவு கொண்டதாக இருந்தால் எதிர் பக்கங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மனையில் நீளவாக்கில் எதிராக உள்ள இரு பக்க அளவுகளை கூட்டி வரும் விடையை இரண்டால் வகுக்க வேண்டும்.மனையின் மொத்த அளவுமனை அகலவாக்கில் எதிராக உள்ள இரு பக்கங்களிலும் உள்ள அளவுகள் கூட்ட வேண்டும். வரும் விடையை இரண்டால் வகுக்க வேண்டும். மேற்கண்ட முறைகளில் கிடைத்த இரு எண்ணிக்கை பெருக்கினால் வரும் அளவு தான் மனையின் மொத்த அளவு.
இது போல் மனையின் அளவை பொறுத்து பல்வேறு முறைகளில் கணக்கிடுவர். சரியான அளவு கணக்கிட்டு மனையில் எல்லைகளை வரையறை செய்தால் தான் எதிர்காலத்தில் சட்ட சிக்கலின்றி இருக்க முடியும். அருகேயுள்ள வீட்டு மனைக்கும், நமக்கும் பிரச்னை வராமல் இருக்கும்.
