தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ மர அரவை மில் மாமூலில் கொழிக்கும் அதிகாரிகள்!

மர அரவை மில் மாமூலில் கொழிக்கும் அதிகாரிகள்!

மர அரவை மில் மாமூலில் கொழிக்கும் அதிகாரிகள்!


PUBLISHED ON : பிப் 11, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 11, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இஞ்சி டீக்கு ஆர்டர் தந்தபடியே, ''ஆக்டிங் துணைவேந்தர் மாதிரி வலம் வர்றாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''எந்த பல்கலையில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.

''மதுரை காமராஜ் பல்கலையில், பல மாசமா துணைவேந்தர் இல்ல... பதிவாளர், தேர்வாணையர், கூடுதல் தேர்வாணையர், டீன், தொலைநிலை கல்வி திட்ட இயக்குநர்னு பல முக்கியமான பதவிகளும், பல வருஷமா காலியா கிடக்குதுங்க...

''கல்லுாரி கல்வி கமிஷனர் சுந்தரவள்ளி தலைமையிலான, கன்வீனர் குழு தான் நிர்வாகத்தை கவனிக்குது... இதுல, உறுப்பினரா இருக்கிற பேராசிரியர் ஒருத்தர், சிண்டிகேட் உறுப்பினராகவும் இருக்காருங்க... கன்வீனர் சென்னையில் இருக்கிறதால, இந்த பேராசிரியர் தான் நிர்வாகத்துல ஆதிக்கம் செலுத்துறாருங்க...

''கன்வீனரின் தயவுல, துணைவேந்தர் சேம்பரையே பேராசிரியர் பயன்படுத்த துவங்கிட்டாருங்க... தன்னை பார்க்க சக பேராசிரியர்கள் வந்தாலும், துண்டு சீட்டுல யார், எதுக்குன்னு எழுதி செக்யூரிட்டியிடம் குடுத்தால் தான் சந்திப்பாருங்க...

''கிட்டத்தட்ட அறிவிக்கப்படாத துணைவேந்தராகவே மாறிட்டார்னு, கன்வீனருக்கு 'கம்ப்ௌய்ன்ட்' போனதுங்க... இதனால கடுப்பான அவங்க, துணைவேந்தர் அறையை பயன்படுத்த தடை போட்டுட்டாங்க...

''அதே நேரம், துணைவேந்தரின், வாகனத்தை மட்டும் பேராசிரியர் பயன்படுத்திட்டு இருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''கூட்டணி துாதரா மாறிடுவாரோன்னு சந்தேகப்படுதாவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''வி.சி., கட்சியின் துணை பொதுச்செயலரா இருந்து, தி.மு.க.,வை விமர்சனம் பண்ணியதால, அங்கிருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் சேர்ந்துட்டாருல்லா... அங்கயும் மேலாண்மை பொதுச்செயலர் பதவியை வாங்கிய கையோட, தன் பழைய தலைவர் திருமாவளவனை பார்த்து வாழ்த்து வாங்கினாரு வே...

''விஜய் அனுமதி யுடன் தான், திருமாவை ஆதவ் பார்த்திருக்காராம்... '2026 சட்டசபை தேர்தல்ல, தி.மு.க., கூட்டணியில், வி.சி.,க்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்குனா, த.வெ.க., கூட்டணிக்கு வி.சி.,யை அழைச்சுட்டு போறதுக்கு பாலமா ஆதவ் செயல்படுவாரோ'ன்னு ஆளும் தரப்பு சந்தேகப்படுது...

''இதனால, ஆதவ் நடவடிக்கையை உளவுத்துறை போலீசார் உன்னிப்பா கண்காணிக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''அனுமதியே வாங்காம செயல்படறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''யாரை சொல்றீங்க பா...'' என கேட்டார், அன்வர்பாய்.

''சேலம் மாவட்டம், டேனிஷ்பேட்டை, ஓமலுார், காடையாம்பட்டி, சின்னப்பம்பட்டி, தீவட்டிப்பட்டி பகுதிகள்ல, 20க்கும் மேற்பட்ட அனுமதி பெறாத மர அறுவை மில்கள் இருக்கு...

''இந்த மில்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய டேனிஷ்பேட்டை வனத்துறையினர், வாராந்திர மாமூல் வாங்கிண்டு கிளம்பிடறா ஓய்...

''இதனால, வனப்பகுதிகளை மொட்டை அடிச்சு, தனியார் மர அறுவை மில்கள் கொழுத்த லாபம் சம்பாதிக்கறது... டேனிஷ்பேட்டை வனத்துறை அதிகாரி, எப்பவும் போதையில தான் இருக்கார்...

''இவருக்கு கீழ் செயல்படும் அதிகாரிகள், மர அரவை மில்கள்ல மாமூல் வாங்கி, அதிகாரிக்கு பங்கு குடுத்துட்டு, தனிக்காட்டு ராஜாக்களா வலம் வரா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

''தங்கராஜ் இங்கன உட்காரும்... நாங்க கிளம்புதோம்...'' என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us