தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ 3 ஆண்டுகளை முடித்தும் மாற்றப்படாத அதிகாரிகள்!

 3 ஆண்டுகளை முடித்தும் மாற்றப்படாத அதிகாரிகள்!

 3 ஆண்டுகளை முடித்தும் மாற்றப்படாத அதிகாரிகள்!

2


PUBLISHED ON : ஜூன் 10, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 10, 2026 12:00 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இஞ்சி டீயை உறிஞ்சியபடியே, “தி.மு.க., - காங்., மத்தியில மாட்டிக்கிட்டு முழிக்கிறாங்க...” என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.

“என்ன விஷயம் பா...” என கேட்டார், அன்வர்பாய்.

“தி.மு.க., முன்னாள் அமைச்சரும், திருச்செந்துார் எம்.எல்.ஏ.,வுமான அனிதா ராதாகிருஷ்ணன், 'காங்கிரஸ் இல்லாத துாத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவேன்'னு சபதம் போட்டதும் இல்லாம, ராகுலை தாறுமாறா திட்டியும் பேசிட்டாருல்ல...

“இதுக்காக, அனிதாவை கண்டிச்சு துாத்துக்குடி காங்கிரசார் போராட்டம் நடத்தினாங்க... இதுல பங்கேற்ற காங்., நிர்வாகிகளில் ஒருவரான காமராஜின் ஆட்டோவை, அனிதா ஆதரவாளர்கள் அடிச்சு நொறுக்கிட்டாங்க...

“அடுத்து, அனிதா வீட்டு முன்னாடி போராட்டம் நடத்த, தமிழக மாணவர் காங்., தலைவர் சின்னதம்பி தயாராகிட்டு இருக்காரு... இதனால, 'விருதுநகர் மாவட்டத்துல இருந்து இங்க வந்து அரசியல் செய்ய பார்க்கிறியா'ன்னு, அவரையும் அனிதா ஆட்கள் மிரட்டியிருக்காங்க...

“அசராத சின்னதம்பி, 'நான் போராட்டம் நடத்துவேன்... முடிஞ்சா தடுத்து பாருங்க'ன்னு சவால் விட்டிருக்காரு... 'இவங்களால பெரிய அக்கப்போரா இருக்கே'ன்னு துாத்துக்குடி போலீசார் புலம்புறாங்க...” என்றார் அந்தோணிசாமி.

“போலி பத்திரப்பதிவுகள் அதிகமா நடக்கறது ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

“திருநெல்வேலி, மேலப்பாளையம் சார் - பதிவாளர் ஆபீஸ்ல, கேரள மாநிலம், பாலக்காட்டில் உள்ள ஒரு சொத்துக்கு பத்திரப்பதிவு செய்திருக்கா... இதுக்காக, பாலக்காடு மற்றும் திருவனந்தபுரத்தை சேர்ந்த ரெண்டு மூதாட்டிகள் உயிருடன் இருக்கறதா, திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டாக்டர் ஒருத்தர் கையெழுத்து மற்றும் முத்திரையுடன், போலியான உயிர்வாழ் சான்றிதழ் தாக்கல் பண்ணியிருக்கா ஓய்...

“சம்பந்தப்பட்ட டாக்டர், 'நான் அந்த மூதாட்டிகளை பார்க்கவே இல்ல... நான் எந்த சான்றிதழும் தரல'ன்னு சிட்டி போலீஸ்ல புகாரே குடுத்திருக்கார்... புகார் குடுத்து ரெண்டு மாசமாகியும், வழக்கே பதிவு பண்ணாம போலீசார் இழுத்தடிக்கறா ஓய்...

“பத்திர எழுத்தர்கள் பலரும், 'மேலப்பாளையம் சார் - பதிவாளர் ஆபீஸ்ல, இந்த மாதிரி நிறைய போலி பத்திரப்பதிவுகள் அதிகமா நடக்கறது... யாரும் கண்டுக்கறது இல்ல'ன்னு புலம்பறா ஓய்...” என்றார் குப்பண்ணா.

“பொன் கோகிலா மேடம்... சாயந்தரமா பேசுதேன்...” என, மொபைல் போனை, 'ஆப்' செய்தபடியே வந்த பெரியசாமி அண்ணாச்சி, “இன்னும் மாறாம இருக்காவ வே...” என்றபடியே தொடர்ந்தார்...

“தமிழக வெற்றிக் கழக அரசு வந்ததும், நிறைய ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை மாத்திட்டு இருக்காங்கல்லா... இதுல, கடந்த ஆட்சியில் ஊழல் புகார்ல சிக்கியவங்களுக்கு முக்கிய பதவிகளும், நேர்மையானவங்களுக்கு, 'டம்மி' இடங்களையும் குடுத்திருக்காவ வே...

“இது தவிர, சில அதிகாரிகள் மூணு வருஷங்களை தாண்டியும் அதே இடத்துல இருக்காவ... குறிப்பா, 'தாட்கோ' உயர் அதிகாரி, நாலு வருஷமா நங்கூரம் போட்ட மாதிரி இருக்காரு வே...

“பழங்குடியினர் நலத்துறை உயர் அதிகாரியும், மூணு வருஷத்தை தாண்டியும் அதே பதவியில நீடிக்காரு... 'இவங்களை எல்லாம் ஏன் மாத்தல'ன்னு அந்த துறை ஊழியர்களே முணுமுணுத்துட்டு இருக்காவ வே...'' என முடித்தார் அண்ணாச்சி.

“கந்தசாமி, அண்ணாதுரை வரா... பில்டர் காபி குடும் நாயரே...” என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us