sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

நுாதன முறையில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள்!

/

நுாதன முறையில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள்!

நுாதன முறையில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள்!

நுாதன முறையில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள்!

4


PUBLISHED ON : டிச 08, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : டிச 08, 2024 12:00 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

“ஊழியர்கள் எல்லாம் அலறுதாவ வே...” என்றபடியே, நாட்டு சர்க்கரைடீக்கு ஆர்டர் தந்தார் பெரியசாமி அண்ணாச்சி.

“எந்த துறையில பா...”என கேட்டார், அன்வர்பாய்.

“டாஸ்மாக் கடைகள்ல,குவார்ட்டர் பாட்டிலுக்குகூடுதலா, 10 ரூபாய் வாங்குதாங்கல்லா... இப்படி கூடுதல் பணம் வசூலிச்சா, வசூல் செய்தஊழியர் மட்டுமல்லாம, அந்த கடையில் இருக்கிறஎல்லா ஊழியர்கள் மீதும்நடவடிக்கை எடுக்க, டாஸ்மாக் அதிகாரிகள் அதிரடி உத்தரவு போட்டாங்கல்லா...

“இதுக்கு, டாஸ்மாக் ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிச்சாலும்,அதிகாரிகள் அசைஞ்சு குடுக்கல... அதுவும் இல்லாம, 'தவறுகளை கண்டுக்காம இருக்கிற மாவட்ட மேலாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்'னும் சொல்லிட்டாவ வே...

“இதனால, ஊழியர்கள்எல்லாம் இப்ப பயத்துலஇருக்காவ... அதுவும் இல்லாம, தங்களை 'கவனிக்கிற' மதுபான நிறுவனங்களின் சரக்குகளை அதிக அளவுல, 'குடி'மகன்கள் தலையிலகட்டிட்டு இருந்தாவ... அதுவும் இப்ப குறைஞ்சிட்டு வே...” என்றார், அண்ணாச்சி.

“எதிர்க்கட்சி தலைவர் தொகுதியில், லாட்டரிவிற்பனை சக்கை போடுபோடுதுங்க...” என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

“சேலம் மாவட்டம்,இடைப்பாடி மற்றும் சுற்று பகுதிகள்ல, துண்டுசீட்டு லாட்டரிகள் அதிக அளவில் விற்கப்படுது...யார் யார் இதை விற்குறாங்க, மெயின் ஏஜன்ட்கள் யார், சில்லரை வியாபாரிகள் யார்னு உள்ளூர் போலீசாருக்கு நல்லாவே தெரியுமுங்க...

“ஆனாலும், 'கட்டிங்' காரணமா யாரையும் கண்டுக்கிறது இல்ல... 'லாட்டரி சீட்டு விற்கிறவங்க மேல வழக்கு போடுங்க'ன்னு எஸ்.பி.,உள்ளிட்ட அதிகாரிகளிடம் இருந்து உத்தரவுவந்தாலும், மொத்த ஏஜன்ட்களை விட்டுட்டு,சில்லரை வியாபாரிகள் மேல மட்டும் வழக்கு போட்டு கணக்கு காட்டிடுறாங்க...” என்றார், அந்தோணிசாமி.

“நுாதன முறையில் லஞ்சத்தை வசூல் பண்ணிடறா ஓய்...” என்றகுப்பண்ணாவே தொடர்ந்தார்...

“சேலம் மாவட்டம்ஆத்துார் யூனியன்ல, 20ஊராட்சிகள் இருக்கு... யூனியன் வாயிலாகவே,ஊராட்சிகள்ல குடியிருப்புகள் கட்டறது,குடிநீர், சாலை வசதி, சாக்கடை அமைக்கறது உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் நடக்கறது ஓய்...

“இதை செய்ற கான்ட்ராக்டர்கள், யூனியன் ஆபீஸ்ல இருக்கற அந்தந்த பிரிவு அதிகாரியிடம் கையெழுத்து வாங்கினாதான், பில் தொகையை வாங்க முடியும்... இதுக்கு,அதிகாரிகளின் தகுதிக்குஏற்ப, 'தட்சணை' வைக்கணும் ஓய்...

“ஆனா, இது மற்ற பிரிவு அலுவலர்கள் மூலம்வெளியில தெரிஞ்சு போயிடுது... சில நேரங்கள்ல, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடமும்மாட்டிக்கறா ஓய்...

“இதனால, யூனியன் அதிகாரிகள் இப்ப புது ரூட்டை பிடிச்சுட்டா... அதாவது, தங்களது வீட்டுல பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்டநிகழ்ச்சிக்கு ஏற்பாடு பண்ணி, கான்ட்ராக்டர்களுக்கு அழைப்பு விடுக்கறா ஓய்...

“கான்ட்ராக்டர்களும் கரெக்டா ஆஜராகி, கொடுக்க வேண்டிய லஞ்சத்தை, 'கிப்ட்' பார்சலா குடுத்துட்டு போயிடறா... அவாளதுபில்களும் உடனுக்குடன்,'சேங்ஷன்' ஆயிடறது ஓய்...” என முடித்தார், குப்பண்ணா.

“பயங்கர ஐடியாவால்லா இருக்கு...” என,வியந்தபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.






      Dinamalar
      Follow us