sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 11, 2026 ,பங்குனி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

 பேச்சு, பேட்டி, அறிக்கை

/

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : ஏப் 08, 2026 02:29 AM

Google News

PUBLISHED ON : ஏப் 08, 2026 02:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிக்கை: உதயநிதிக்கு, விஜயை காட்டிலும் பல மடங்கு கூட்டம் அதிகமாக வருகிறது. மிக ஒழுக்கமாகவும், கட்டுப்பாட்டுடனும் திரளும் கூட்டமாக அது உள்ளது. எனவே, அறிவார்ந்த இளைஞர் கள் அனைவரும் உதயநிதியின் பக்கம் உள்ளனர். த.வெ.க., இளைஞர்களை, அக்கட்சியினராலேயே கட்டுப்படுத்த முடிவதில்லை. அதனால், கட்சி கூட்டங்களிலேயே, இரும்பு கம்பிகளில் களிம்பு தடவி வைக்கின்றனர். அதில் ஏறும் இளைஞர்கள் வழுக்கி விழுந்து, காயம் அடைவதை பார்க்க முடிகிறது. காசு கொடுத்து கூட்டி வரப்படும் கூட்டம், எப்படா உதயநிதி கிளம்புவார்னு அமைதியாகத்தானே இருக்கும்!

தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: பல நே ரங்களில் ஆரம்பம் தான், முடிவுகளை தீர்மானித்திருக்கிறது. ஆனால், அது எல்லா நேரங்களிலும் அல்ல. கடைசி நேரத்தில் வேட்பாளர்கள் அறிவிப்பு என்ற நம்முடைய தாமதமான முடிவு, வெற்றிக்கான உறுதியை சலனப்படுத்தி விடாது. எனவே, மனம் தளர வேண்டாம். போர்க்களத்தில் வீரனாக விளையாட போவது நாம்தான். விளையாட்டில் இறுதி வெற்றி நமதே என்பதை திடமாக நம்புவோ ம்.

அது சரி... களத்துக்கு வெளியில இருந்து, இவர் எவ்வளவு வேணும்னாலும் பேசலாம்... வேட்பாளராக களத்தில் இறங்கி பார்த்தால் தானே, வலியும், வேதனையும் தெரியும்! தமிழக காங்., செய்தி தொடர்பாளர் கே.சந்திரசேகரன் பேட்டி: தமிழகத்தில், அ.தி.மு.க., வாயிலாக பா.ஜ., காலுான்ற முயற்சிக்கிறது; அ.தி.மு.க.,வை, பா.ஜ., காப்பாற்றுகிறது; அதை விழுங்க பார்க்கிறது என்பது தான் என் குற்றச்சாட்டு. பழனிசாமி மீதான நெடுஞ் சாலை துறை ஊழல் வழக்குக்கு, சி.பி.ஐ., விசாரணைக்கு அனுமதி கொடுக்காமல், உச்ச நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது. பா.ம.க., தலைவர் அன்புமணி மீது மருத்துவக் கல்லுாரி ஊழல் வழக்கு உள்ளது. அக்கூட்டணி, ஊழலை மறைப்பதற்கான கூட்டணியாக இருக்கிறது. தி.மு.க., கூட்டணி கொள்கை சார்ந்த கூட்டணியாக உள்ளது.

தி.மு.க., அமைச்சர் நேரு மீது, அமலாக்கத் துறை சுமத்தியிருக்கும், 1,908 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டை இவர் மறந்துட்டாரோ?

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேச்சு: ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சி போன்ற கோரிக்கைகள், விருப்பங்கள் தி.மு.க., கூட்டணியில் இருந்து தான் வெளியாகின்றன. தே.ஜ., கூட்டணியை பொறுத்த வரை, அ.தி.மு.க., தலைமையில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைய வேண்டும் என்பதே நோக்கம்.

என்னதான் இருந்தாலும், தான் பழைய அ.தி.மு.க., காரர்தான் என்பதை நி ரூபிச்சிட்டாரே!






      Dinamalar
      Follow us