sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

மருத்துவ கழிவு விவகாரத்தில் தப்பிய அதிகாரிகள்!

/

மருத்துவ கழிவு விவகாரத்தில் தப்பிய அதிகாரிகள்!

மருத்துவ கழிவு விவகாரத்தில் தப்பிய அதிகாரிகள்!

மருத்துவ கழிவு விவகாரத்தில் தப்பிய அதிகாரிகள்!

4


PUBLISHED ON : டிச 31, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : டிச 31, 2024 12:00 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''கூட்டம் கூட்டமா அழைச்சு, பத்திரிகை குடுத்துடுறாருங்க...'' என்றபடி, பெஞ்சில் அமர்ந்த அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''அ.தி.மு.க., முன்னாள்அமைச்சர் வேலுமணியின் மகன் திருமணம், வர்ற மார்ச்ல நடக்கப் போகுது... கட்சி நிர்வாகிகள் எல்லாருக்கும் தனித்தனியா அழைப்பிதழ் குடுக்கிறது சிரமங்கிறதால, மாவட்ட செயலர்களுக்கு முன்கூட்டியே தகவல் தந்து, நிர்வாகிகளை ஒரே இடத்துக்கு வரவழைச்சு, பத்திரிகை குடுத்துடுறாருங்க...

''மதுரையில் மாநகர், புறநகர் கிழக்கு, மேற்குன்னு மூணு மாவட்டங்கள் இருக்கு... இதுல, மாநகர செயலர் செல்லுார் ராஜு மற்றும் நிர்வாகிகளை, கட்சி ஆபீஸ்லயும், கிழக்கு மாவட்ட நிர்வாகிகளை, செயலரான ராஜன் செல்லப்பா திருமண மண்டபத்துலயும் வேலுமணி பார்த்து பத்திரிகை வச்சாருங்க...

''மேற்கு மாவட்ட நிர்வாகிகளை, செயலரானஉதயகுமாரின் டி.குன்னத்துார் அம்மா கோவிலுக்கு வரவழைச்சு,திருமண பத்திரிகையை குடுத்து, 'எல்லாரும் அவசியம் வரணும்'னு சொல்லிட்டு போயிருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''போராட்டத்துல பின்வாங்கிட்டாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''யார் ஓய் அது...'' என கேட்டார், குப்பண்ணா.

''துாத்துக்குடி சிட்டிக்குள்ள இருக்கிற, 'டாஸ்மாக்' கடைகள்ல பார் நடத்துறவங்க, சமீபத்துல போலீசாருக்குஎதிரா ஒரு நாள் திடீர் ஸ்டிரைக்குல குதிச்சாங்க...சட்டவிரோதமா யாராவது மது விற்பனையில்ஈடுபட்டா, அந்த பகுதியில் இருக்கிற பார் உரிமையாளர்கள் மீதும்டவுன் ஏ.எஸ்.பி., வழக்கு போடுறதா புகார் சொல்லி தான், இந்த ஸ்டிரைக்குல இறங்குனாங்க பா...

''ஆனா, ஆளுங்கட்சிமாநகர புள்ளியின் துாண்டுதல்ல இந்த போராட்டம் நடக்கிறதா,ஆளுங்கட்சி தலைமைக்கு உளவுப்பிரிவு போலீசார் தகவல் அனுப்பிட்டாங்க... இதைகேள்விப்பட்ட பார் உரிமையாளர்கள், சாயந்தரம் 6:00 மணிக்கேபோராட்டத்தை கைவிட்டுட்டு, பார்களைதிறந்துட்டாங்க...

''சீக்கிரமே பார்களுக்கு டெண்டர் விடப் போறதால, போராட்டத்துல இறங்கிய நமக்கு மறுபடியும் பார்கள் கிடைக்குமான்னு உரிமையாளர்கள் கலக்கத்துல இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''யார் மேலயும் நடவடிக்கை எடுக்கல வே...'' என, கடைசி தகவலுக்கு மாறிய பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''திருநெல்வேலி மாவட்டம், கல்லுார், பழவூர் பகுதிகள்ல சமீபத்துல கேரள மாநிலமருத்துவக் கழிவுகள் 450 டன்னை கொட்டிட்டுபோயிட்டாங்கல்லா... இது பெரிய பிரச்னையாகி, இந்த கழிவுகளைகேரளா தரப்புல இருந்தே,திரும்ப அள்ளிட்டு போயிட்டாவ வே...

''இது சம்பந்தமா, ஒரு மாசத்துக்கு முன்னாடியே, சுத்தமல்லி போலீசிலும், முதல்வர் தனிப்பிரிவிலும்உள்ளூர் மக்கள் புகார் அனுப்பியும், யாரும் ஏறெடுத்தும் பார்க்கல...கிட்டத்தட்ட 60 லாரிகள்ல மருத்துவக் கழிவுகளை, ஆறு கிராமங்கள்ல கொட்டிட்டு போறதுக்கு உள்ளூர் போலீசார், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சோதனைச்சாவடி அதிகாரிகள் உடந்தையாஇருந்திருக்காவ வே...

''இவங்க மேல இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கல... இத்தனைக்கும் கேரள அரசு தரப்புல, அந்த மாநிலத்துல மருத்துவக் கழிவுகளை அனுப்பியவங்க மேல நடவடிக்கை எடுத்துட்டாவ... நம்ம ஊர்ல தான் அலட்சியமா இருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.

பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.






      Dinamalar
      Follow us