/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பொது போலீசை தாக்கிய பெயின்டர் கைது
/
பொது போலீசை தாக்கிய பெயின்டர் கைது
PUBLISHED ON : ஏப் 29, 2025 12:00 AM
சென்னை, நகர், ஏ
எம்.ஜி.ஆர்., நகர் காவல் நிலைய போலீஸ்காரர் முத்து, 36. கடந்த 26ம் தேதி நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, நெசப்பாக்கம் காமராஜர் சாலையில், இருவர் சண்டையிடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு சென்று முத்து எச்சரித்தும், அவர்கள் கேட்கவில்லை. இதையடுத்து வீடியோ எடுக்க முயன்றார். அப்போது அதில் ஒருவர், போலீஸ்காரர் முத்துவிடம் ஒருமையில் பேசி தாக்கினார்.
இதில் காயமடைந்த முத்து, கே.கே.நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். முத்துவை தாக்கியது, நெசப்பாக்கம், பாரதி நகரைச் சேர்ந்த பெயின்டர் ஜனார்த்தனன், 25, எனத் தெரிந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர்.

