/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கூடலுார் ஏரிக்கரை சாலையில் மின் விளக்குகள் எரியாததால் பீதி
/
கூடலுார் ஏரிக்கரை சாலையில் மின் விளக்குகள் எரியாததால் பீதி
கூடலுார் ஏரிக்கரை சாலையில் மின் விளக்குகள் எரியாததால் பீதி
கூடலுார் ஏரிக்கரை சாலையில் மின் விளக்குகள் எரியாததால் பீதி
PUBLISHED ON : மே 10, 2025 12:00 AM

மறைமலைநகர்:மறைமலைநகர் நகராட்சி, கூடலுார் -- கோவிந்தாபுரம் சாலை, 5 கி.மீ., துாரம் உடையது.
மட்டாண ஓடை, கோவிந்தாபுரம், கருநிலம் உள்ளிட்ட கிராம மக்கள், மறைமலைநகர் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு சென்று வர, இந்த சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலையோரம் நகராட்சி சார்பில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மின் விளக்குகள் பல மாதங்களாக எரிவதில்லை.
இதன் காரணமாக, இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், அச்சத்துடன் சென்று வரும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, இந்த பிரச்னைக்கு தீர்வு, மின் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இந்த சாலையில், கூடலுார் ஏரிக்கரை செல்லும் பகுதியில், இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரிவதில்லை. இந்த பகுதி, இரவு நேரங்களில் வேலைக்குச் சென்று வருவோரிடம் அடிக்கடி வழிப்பறி நடைபெறும் பகுதி என்பதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
கூடலுார் ஏரிக்கரையில் அடிக்கடி விபத்துகளும் நடைபெற்று வருகின்றன. மேலும், விஷ ஜந்துக்களின் அபாயமும் இந்த பகுதியில் அதிக அளவில் உள்ளது.
மறைமலை நகர் நகராட்சி சார்பில், மின் விளக்குகளை பழுது நீக்கும் வாகனங்கள் வந்து செல்கின்றன. ஆனால், மின் விளக்குகள் மட்டும் எரிவதில்லை.
ஏரிக்கரை முடிவில் சாய்ந்த நிலையில் உள்ள மின்விளக்கு கம்பம் கூட சீரமைக்கப்படவில்லை. அனைத்தும் காட்சிப் பொருளாகவே உள்ளன.
எனவே, நகராட்சி நிர்வாகம் முறையாக இந்த மின் விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.