/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி பரிசல் ஓட்டிகள் ஆர்ப்பாட்டம்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி பரிசல் ஓட்டிகள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி பரிசல் ஓட்டிகள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி பரிசல் ஓட்டிகள் ஆர்ப்பாட்டம்
PUBLISHED ON : மார் 12, 2026 06:54 AM

பென்னாகரம்:பென்னாகரத்தில்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., தொழிலாளர்கள்
சங்கம் சார்பில் பரிசல் ஓட்டிகள், சமையல் தொழிலாளர்கள் பென்னாகரம் பி.டி.ஓ., அலு-வலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.
சங்க மாவட்ட தலைவர் ராஜி தலைமை வகித்தார். மாவட்ட
செயலாளர் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தார். மாநில துணைச்-செயலாளர்
நாகராசன், மாவட்ட தலைவர் கலாவதி உள்ளிட்-டோர் கண்டன உரையாற்றினர்.
இதில்,
ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்து, வேலை இழக்கும்
காலங்களில் பரிசல் ஓட்டிகள், சமையல், மசாஜ் தொழிலாளர்கள்
ஆகியோர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பரிசல்கள்
நிறுத்துமிடத்தில் நடைபாதை வியாபா-ரிகள் கடை அமைத்துக் கொள்ள அனுமதி
அளித்துள்ளதை திரும்ப பெற வேண்டும்.
சமையல் தொழிலாளர்களுக்கு
அரசின் சார்பில் அடையாள அட்டை வழங்க வேண்டும். மீன் கழிவுகளை
சுத்திகரிப்பு, பரிசல் இயக்கும் நேரம் மாற்றம், தொழிலாளர் களுக்கு
மருத்துவ பரி-சோதனை முகாம் உள்ளிட்ட நீதிமன்ற தீர்ப்பை
நடைமுறைப்ப-டுத்த வேண்டும் எனக்கோரி கோஷமிட்டனர்.

