தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ 'பட்டுவாடா' பணத்தில் கார், பைக் வாங்கும் கட்சி நிர்வாகிகள்!

 'பட்டுவாடா' பணத்தில் கார், பைக் வாங்கும் கட்சி நிர்வாகிகள்!

 'பட்டுவாடா' பணத்தில் கார், பைக் வாங்கும் கட்சி நிர்வாகிகள்!


PUBLISHED ON : ஏப் 24, 2026 01:03 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 24, 2026 01:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மெ து வடையை கடித்தபடியே, ''நிறைய பேர் சத்தம் காட்டாம ஒதுங்கிட்டா ஓய்...'' என, விவாதத்தை ஆரம்பித்தார் குப்பண்ணா.

''என்ன விவகாரம் பா...'' என கேட்டார், அன்வர்பாய்.

''கடந்த ஜனவரியில, தமிழக காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியாக உள்ள, 71 மாவட்டங்களுக்கு புதிய தலைவர்களை நியமிச்சாங்கல்ல... பதவி இழந்த மாவட்ட தலைவர்கள் பலரும், தேர்தல் பணிகள்ல ஈடுபடாம ஒதுங்கிட்டா ஓய்...

''தலைநகர் சென்னையில, 'மாஜி' மாவட்ட தலைவர்கள் பலர், வீட்டை விட்டே வெளியில வரல... வட சென்னை கிழக்கு மாவட்ட காங்., முன்னாள் தலைவர் சிவராஜசேகரன் வீடு, துணை முதல்வர் உதயநிதி போட்டியிட்ட சேப்பாக்கம் தொகுதியில இருக்கு ஓய்...

''சிவராஜசேகரன், மாநகராட்சி கவுன்சிலராகவும் இருக்கார்... உதயநிதி தொகுதியில ஒதுங்கியிருந்தா, ஆளுங்கட்சியிடம் எந்த சலுகையையும் எதிர்பார்க்க முடியாதோல்லியோ... அதனால, தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து, உதயநிதிக்காக முழுமூச்சா தேர்தல் பணியில ஈடுபட்டிருந்தார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''கவனிச்சவங்களுக்கு மட்டுமே கரிசனம் காட்டியிருக்காங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''கோவை மாவட்டத்தில், 34 பேரூராட்சிகள்லயும், மூணு வருஷத்துக்கு மேல பணியாற்றிய இளநிலை உதவியாளர்கள், வரி வசூலிப்பவர்களை, தேர்தலுக்காக இடமாற்றம் செஞ்சாங்க... இதுல, உயர் அதிகாரிகளுக்கு, 'கவனிப்பு' செஞ்சவங்களை, பக்கத்து பேரூராட்சிகளுக்கும், கவனிக்காதவங்களை, ரொம்ப தள்ளி இருக்கிற பேரூராட்சிகளுக்கும் துாக்கி அடிச்சிட்டாங்க...

''இதுல, மாற்றுத்திறனாளிகள், கை குழந்தைகள் வச்சிருக்கிற பெண் அதிகாரிகள் ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்காங்க... அதே நேரம், கோவை பேரூராட்சி இயக்குநர் அலுவலகத்தில் பணியாற்றிய சிலர், கண்துடைப்புக்காக இடமாறுதல்ல போய், மீண்டும் இயக்குநர் அலுவலகத்துக்கே வந்துட்டாங்க...

''ஓட்டு எண்ணிக்கை முடிஞ்சதும், தங்களுக்கு பழைய இடங்களை தருவாங்களா அல்லது அதுக்கும் கவனிக்கணுமான்னு எல்லாரும் புலம்பிட்டு இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''கார், பைக்குகளை, 'புக்' பண்ணியிருக்காவ வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.

''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.

''ராமநாதபுரம் தொகுதியில், தற்போதைய தி.மு.க., - எம்.எல்.ஏ., முத்துராமலிங்கமே மீண்டும் போட்டியிட்டாரு... இவரை எதிர்த்து, அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., வேட்பாளரா நாகேந்திரன் என்பவர் போட்டியிட்டாரு வே...

''இவர் ஏற்கனவே, 'பசை'யானவர் தான்... இதுபோக, கட்சியின் தேசிய தலைமையில இருந்தும் பெரிய தொகை வந்திருக்கு... இதனால, தாராளமா செலவு செஞ்ச நாகேந்திரன், கட்சி நிர்வாகிகளிடம் பெரும் தொகையை கொடுத்து, வாக்காளர்களுக்கு பட்டுவாடா பண்ண சொல்லியிருக்காரு வே...

''ஆனா, மாவட்ட, ஒன்றியம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர், அந்த பணத்தில் பெரும் பகுதியை அமுக்கிட்டாவ... இதுல பல நிர்வாகிகள் புதிய கார் மற்றும் பைக், 'புக்' பண்ணியிருக்காங்க... இன்னும் சிலர், தங்களது வீடுகளை சீரமைக்க திட்டம் போட்டிருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.

பேச்சு முடியவும், பெரியவர்கள் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us