PUBLISHED ON : செப் 19, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரெட்டியார்சத்திரம்:திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தை அடுத்த பலக்கனுாத்து அருகே பொட்டிநாயக்கன்பட்டி மயான ஓடையில் மயில்கள் இறந்து கிடப்பதாக கன்னிவாடி வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. ரேஞ்சர் ஆறுமுகம், பாரஸ்டர் அய்யனார் செல்வம் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
ஓடை மட்டுமின்றி ஒரு கி.மீ., துாரத்திற்குள் பல இடங்களில் 17 மயில்கள் இறந்து கிடந்தன. இப்பகுதியில் உள்ள மக்காச்சோள பயிரை கூட்டமாக வரும் மயில்கள் சேதப்படுத்தின. இவற்றை கட்டுப்படுத்த அரிசியில் விஷம் கலந்து மயில்களை கொன்றிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். சில இடங்களில் சிதறிக்கிடந்த அரிசியையும் சேகரித்துள்ளனர். விஷம் வைத்தவர்கள் குறித்தும் வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.