/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மக்கள் குறைதீர்வு கூட்டம் 375 மனுக்கள் ஏற்பு
/
மக்கள் குறைதீர்வு கூட்டம் 375 மனுக்கள் ஏற்பு
PUBLISHED ON : மே 06, 2025 12:00 AM
செங்கல்பட்டு,
செங்கல்பட்டில், வாராந்திர மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 375 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
செங்கல்பட்டு கலெக்டர் கூட்ட அரங்கில், மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது. கூடுதல் கலெக்டர் நாராயணசர்மா, மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், சப் - கலெக்டர் மாலதி ஹெலன், வேளாண்மை இணை இயக்குனர் பிரேம்சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு, பட்டா மாற்றம், புதிய ரேஷன் கார்டு, சாலை வசதி, கலைஞர் கனவு இல்ல வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 375 மனுக்கள் வரப்பெற்றன.
இந்த மனுக்கள் மீது சந்தப்பட்ட துறை அலுவலர் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன் பின், மாவட்டத்தில் கடந்த மார்ச் 11ம் தேதி, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று திட்டங்களை துவக்கி வைத்தும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இவ்விழாவில், சிறப்பாக பணியாற்றிய, சப் - கலெக்டர் மாலதி ெஹலன், மறைமலைநகர் நகராட்சி கமிஷனர் ரமேஷ், வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ, கலெக்டர் அலுவலக மேலாளர் செல்வசீலன் உள்ளிட்ட, 28 பேருக்கு நற்சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
திருநங்கையர் கலெக்டரிடம் அளித்த மனு வருமாறு;
தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில், திருநங்கையருக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. வீடுகள் ஒதுக்கியதற்கு பணம் செலுத்த முடியாத நிலை உள்ளது. திருநங்கையரில் ஒரு சிலர் உடல் நிலை பாதிக்கப்பட்டு, வீட்டில் உள்ளனர்.
அவர்களால், வங்கிக் கடன் செலுத்த முடியாத சூழல் உள்ளது. எங்களுக்கு வாழ்வாதாரம் இல்லை.
மற்ற மாவட்டங்களில், வீடுகளை இலவசமாக வழங்கி உள்ளனர். இதேபோன்று, எங்களுக்கும் இலவச வீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனுவின் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.