sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

விசாகா கமிட்டிக்கு 'பெப்பே' காட்டும் ஏட்டு!

/

விசாகா கமிட்டிக்கு 'பெப்பே' காட்டும் ஏட்டு!

விசாகா கமிட்டிக்கு 'பெப்பே' காட்டும் ஏட்டு!

விசாகா கமிட்டிக்கு 'பெப்பே' காட்டும் ஏட்டு!


PUBLISHED ON : ஜன 11, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜன 11, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''போலீசார் இடமாறுதல்லயும் புகுந்துட்டாங்க..'' என்றபடியே, இஞ்சி டீயை உறிஞ்சினார் அந்தோணிசாமி.

''ஆளுங்கட்சியினரை சொல்றீங்களா பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''ஆமாம்... 'லோக்சபா தேர்தலை ஒட்டி, மாநிலம் முழுதும், மூன்று ஆண்டு பணி நிறைவு செய்த போலீசாரை பணியிட மாற்றம் செய்யணும்'னு, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவு போட்டிருக்காரே... மண்டல ஐ.ஜி., மற்றும் டி.ஐ.ஜி.,க்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் போலீசாரை, பணியிட மாற்றம் செய்ற முயற்சியில ஈடுபட்டு வர்றாங்க...

''முதல் கட்டமா, 1,800க்கும் மேற்பட்ட போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டாங்க... அடுத்த பட்டியலும் தயாராகுதுங்க...

''ஆனா, அந்தந்த பகுதி ஆளுங்கட்சி நிர்வாகிகள், தங்களுக்கு வேண்டிய போலீசாரை, வேண்டிய இடத்துக்கு போடுங்கன்னு, அதிகாரிகளுக்கு அழுத்தம் தர்றாங்க...

''போலீஸ் துறையை கையில வச்சிருக்கிற முதல்வர், இடமாறுதல்ல கட்சியினர் தலையிட கூடாதுன்னு உத்தரவு போட்டா நல்லாயிருக்கும்''னு போலீஸ் அதிகாரிகள் எதிர்பார்க்கிறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''பூட்டுன கடைக்கு பக்கத்துலயே, புதுசா கடை திறந்துட்டாவ வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.

''என்ன கடையை சொல்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டியில், பள்ளி மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள் வித்ததா, ரெண்டு மளிகை கடைகள் மேல, போலீசார் வழக்கு போட்டாவ... இதனால, போன மாசம் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், அந்த ரெண்டு கடைகளையும் பூட்டி, 'சீல்' வச்சாவ வே...

''சீல் வைக்கப்பட்ட கடைகள் அப்படியே இருக்கு... ஆனா, அதுக்கு பக்கத்துலயே புதுசா கடையை திறந்து, புகையிலை பொருட்களை விற்பனை பண்ணுதாவ... பள்ளிக்கூட பசங்களும் வந்து வாங்கிட்டு போறாவ...

''இதனால, 'கடையை பூட்டி சீல் வச்சது எல்லாம் வெறும் கண்துடைப்பு'ன்னு அந்த ஏரியா மக்கள் புலம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''விசாகா கமிட்டிக்கே பெப்பே காட்டிண்டு இருக்கார் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதி உளவுப்பிரிவு ஏட்டு, பொம்மனாட்டிகள் விஷயத்துல, 'வீக்'கா இருக்கார்... இவரது கட்டுப்பாட்டுல, மணப்பாறை, வையம்பட்டி, புத்தாநத்தம், வளநாடு, துவரங்குறிச்சின்னு அஞ்சு ஸ்டேஷன்கள் வர்றது ஓய்...

''இதுல ஒரு ஸ்டேஷன் பெண் எஸ்.ஐ.,யை, தன் வலையில வீழ்த்த வசதியா, எஸ்.பி.சி.ஐ.டி.,க்கு விண்ணப்பிக்கும்படி சொல்ல, அவங்க எஸ்.பி.,யிடமே இவரை பத்தி புகார் குடுத்துட்டாங்க... இது குறித்து விசாரிக்க, விசாகா கமிட்டி அமைச்சா ஓய்...

''ஆனா, இதுவரை ஏட்டிடம் விசாகா கமிட்டி எந்த விசாரணையும் நடத்தலை... ஏன்னா, ஏட்டுக்கு அந்த அளவுக்கு மேலிடத்துல செல்வாக்கு இருக்காம்... பாவம், அந்த பெண் எஸ்.ஐ., நொந்து போயிருக்காங்க ஓய்...

''துவரங்குறிச்சி பாரில், முன்னாடி ஒரு முறை ஓசி பீர் கேட்டு ஏட்டு தகராறு பண்ண, அவா கட்டி வச்சு அடிச்சிருக்கா... இதுபோக, சில பெண் போலீசாரிடமும் ஏடாகூட நட்புலயும் இருக்கார் ஓய்...

''இவரை பகைச்சுண்டாலோ, உடன்படாம போயிட்டாலோ, அந்த பெண் போலீசார் பத்தி தப்பு தப்பா மேலிடத்துக்கு ரிப்போர்ட் அனுப்பி, அவாளை டிரான்ஸ்பர் பண்ணிடறார்... இவரது அழிச்சாட்டியம் தாங்க முடியாம, பெண் போலீசார் புலம்பறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

''நாயரே, உம்ம பிரண்டு அச்சுதன் வர்றாரு பாருங்க...'' என்றபடியே அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.






      Dinamalar
      Follow us