PUBLISHED ON : டிச 10, 2024 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நல்லம்பள்ளி, டிச. 10-
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த தண்டுகாரம்பட்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் முதலாம் ஆண்டு பெருவிழா நேற்று நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்றிரவு, 8:00 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது.

