/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
சிறுங்கோழி பாலத்தின் பக்கவாட்டு சுவரில் வளர்ந்துள்ள செடிகளால் உறுதித்தன்மை பாதிப்பு

PUBLISHED ON : ஜூன் 10, 2025 12:00 AM

உத்திரமேரூர், உத்திரமேரூர் -- புக்கத்துறை நெடுஞ்சாலையில், சிறுங்கோழி கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில் உள்ள ஓடை கால்வாய் குறுக்கே, பாலம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
இந்த பாலத்தின் வழியே, ஜல்லி, எம்.சான்ட் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் உட்பட தினமும், 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.
தற்போது, பாலம் முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
இதனால், பாலத்தின் பக்கவாட்டு சுவரில் அரச மரச்செடிகள் வளர்ந்து வருகின்றன. இந்த செடியின் வேர்கள் பாலத்தில் உள்ள சிறு விரிசல்கள் வழியே ஊடுருவதால், அதன் உறுதித்தன்மை பாதிப்படைந்து வருகிறது. பாலம் முழுவதும் சேதமடைய வாய்ப்பு உள்ளது.
இந்த பாலம் உத்திரமேரூர் -- புக்கத்துறை இடையே உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களின் போக்குவரத்து பாலமாக உள்ளது.
எனவே, சிறுங்கோழி பாலத்தின் பக்கவாட்டு சுவரில் வளர்ந்துள்ள அரச மரச்செடிகளை அகற்ற, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.