sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

ஆள் கடத்தல் வழக்கில் அமைதியான போலீசார்!

/

ஆள் கடத்தல் வழக்கில் அமைதியான போலீசார்!

ஆள் கடத்தல் வழக்கில் அமைதியான போலீசார்!

ஆள் கடத்தல் வழக்கில் அமைதியான போலீசார்!

1


PUBLISHED ON : நவ 10, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 10, 2025 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாளிதழை மடித்தபடியே, “இட ஒதுக்கீட்டை கண்டுக்கவே இல்லைங்க...” என்றபடியே, பெஞ்ச் விவாதத்தை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.

“எந்த துறையில வே...” என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.

“பள்ளிக்கல்வி துறையில், 26 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்களாகவும், அதே நிலையில் உள்ள, 11 பேருக்கு துணை இயக்குநர்களாகவும் சமீபத்துல பதவி உயர்வு குடுத்தாங்க... இந்த பதவி உயர்வுல, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழக்கமா தரப்படும், 35 சதவீத ஒதுக்கீட்டை, 10 சதவீதமா குறைச்சிட்டாங்க...

“இதனால, பதவி உயர்வு கிடைக்காத மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், கடும் மன உளைச்சல்ல இருக்காங்க... அதே சமயம், அவங்களுக்கு கீழ்நிலையில் இருக்கும் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, விதிகளை மீறி அதிகமா பதவி உயர்வு குடுத்திருக்காங்க...” என்றார், அந்தோணிசாமி.

“கூடுதல் கட்டணம் வசூலிக்கிறாங்க பா...” என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...

“சென்னை, மேடவாக்கம் பக்கத்துல, அரசு உதவி பெறும் ஆண்கள் கல்லுாரி ஒண்ணு இருக்கு... இங்க, பெரும் பாலும் ஏழை பெற்றோரின் பிள்ளைகள் தான் படிக்கிறாங்க பா...

“இங்க, 'மதிப்பு கூட்டு கல்வி'ன்னு சொல்லி, அரசு நிர்ணயிச்ச கல்வி கட்டணத்தை விட, 5,000 ரூபாயை கூடுதலா வசூல் பண்ணியிருக்காங்க... ஆனா, அப்படி எந்த மதிப்பு கூட்டு கல்வியும் இங்கு கற்று தரவே இல்ல பா...

“நிறைய பெற்றோர், இந்த பணத்தை கடன் வாங்கி தான் தங்களது பிள்ளைகளுக்கு கட்டியி ருக்காங்க... இதனால, 'இந்த பணத்தை திருப்பி தர ணும்'னு கேட்கிறாங்க பா...

“அதுவும் இல்லாம, 800 மாணவர்கள் படிக்கிற இந்த கல்லுாரியில், ஆறேழு கழிப்பறைகள் தான் இருக்கு... இதனால, சுகாதார சீர்கேடு ஏற்படுறதும் இல்லாம, மாணவர்கள் எல்லாம் ரொம்பவே அவதிப்படுறாங்க... இது சம்பந்தமா மாணவர்களின் பெற்றோர் பலர், முதல்வருக்கு புகாரே அனுப்பியிருக்காங்க பா...” என்றார், அன்வர்பாய்.

ஒலித்த மொபைல் போனை எடுத்த குப்பண்ணா, “காயிதே மில்லத் தெரு எதுன்னு கேளுங்கோ... வழிகாட்டுவா...” எனக்கூறி வைத்தபடியே, “துணை முதல்வருக்கு நன்கு தெரிந்தவரை, கைது செய்யாம, திருப்புவனம் போலீஸ் அமைதியாயிட்டா ஓய்...” என்றார்.

“யாருவே அவர்...” என கேட்டார், அண்ணாச்சி.

“சிவகங்கை மாவட்டம் லாடனேந்தல் என்ற ஊரில், போன மாச கடைசியில, சிதம்பரம்னு ஒருத்தரை, ரெண்டு கார்கள்ல ஆயுதங்களுடன் வந்த சிலர் கடத்திட்டு போனா... இது பத்தி திருப்புவனம் போலீசாருக்கு தகவல் கிடைக்க, மொபைல் போன் சிக்னல்களை வச்சு, துரத்தினா ஓய்...

“இதனால, கடத்தல் கும்பல், சிதம்பரத்தை இறக்கி விட்டுட்டு தப்பிடுத்து... அப்புறமா போலீசார் விசாரணை நடத்தி, கடத்தல் சம்பந்தமா ஷேக் முகமது, சக்திவேல்னு ரெண்டு பேரை போன வாரம் பிடிச்சிருக்கா ஓய்...

“இதுல, ஷேக் முகமது, துணை முதல்வர் உதயநிதியின் சினிமா கம்பெனி விவகாரங்களை கவனிச்சிருக்கார்... இவர் கூட இருந்தவர் தான் சிதம்பரம்... இவர், ஷேக்கிடம், 50 லட்சம் ரூபாய் வரை, 'ஆட்டை' போட்டுட்டு, லாடனேந்தல் என்ற தன் சொந்த ஊர்ல வந்து பதுங்கிட்டார் ஓய்...

“அதை மீட்க தான் ஷேக் தரப்பு, அவரை கடத்தியிருக்கு... இது, மேலிடத்துக்கு தெரிய வர, 'இந்த விவகாரத்துல அவசரம் காட்ட வேண் டாம்'னு சொல்லிட்டதால, போலீசாரும் அமைதியாயிட்டா ஓய்...” என, முடித்தார் குப்பண்ணா.

பெஞ்சில் புதியவர்கள் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.






      Dinamalar
      Follow us