/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மின் கம்பிகள் சீரான உயரத்தில் கட்டப்பட்டன
/
மின் கம்பிகள் சீரான உயரத்தில் கட்டப்பட்டன
PUBLISHED ON : நவ 16, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேடவாக்கம், மேடவாக்கம், 3வது வார்டு, சாய்ராம் நகர், முதல் பிரதான சாலையில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்கு, ஒரு மின் கம்பத்திலிருந்து மறு கம்பத்திற்கு செல்லும் மின்சார கம்பிகள், தாழ்வாக தொங்கி கொண்டிருந்தன.
இதனால், பகுதிவாசிகள் விபத்து அச்சத்தில்இருந்தனர். இது குறித்த செய்தி, கடந்த 12ம் தேதி நம் நாளிதழில் வெளியான நிலையில், மேடவாக்கம் மின் வாரிய அதிகாரிகள், சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனர்.
பின், மின்சார ஊழியர்களை வைத்து, இரு கம்பங்களுக்கு இடையே செல்லும் மின் கம்பிகள் சரியான உயரத்தில் மாட்டப்பட்டன. இதையடுத்து, பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

