sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

அரசு பணத்தை ' ஆட்டை ' போடும் தனியார் பள்ளிகள்!

/

அரசு பணத்தை ' ஆட்டை ' போடும் தனியார் பள்ளிகள்!

அரசு பணத்தை ' ஆட்டை ' போடும் தனியார் பள்ளிகள்!

அரசு பணத்தை ' ஆட்டை ' போடும் தனியார் பள்ளிகள்!

2


PUBLISHED ON : அக் 30, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 30, 2024 12:00 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டபராவில் பில்டர் காபியை ஆற்றியபடியே,''லிப்ட் இயங்காம, எல்லாரும் சிரமப்படறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''எந்த ஆபீஸ்ல பா...''என கேட்டார், அன்வர்பாய்.

''சென்னை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில, மொத்தம் எட்டு மாடிகள் இருக்கு... இங்க, 'பி பிளாக்'ல டாக்டர், நோயாளிக்குன்னு தனித்தனி லிப்ட்கள் இருந்துது ஓய்...

''இதுல, ஒரு லிப்ட் பழுதாகி ரெண்டு மாசமாகியும், அப்படியே கிடக்கறது... மீதம் இருக்கற ஒரு லிப்ட்ல தான்டாக்டர்கள், நோயாளிகள்,நர்ஸ்கள், உணவு வண்டிகள், மருத்துவ உபகரணங்கள் எல்லாம்போறது ஓய்...

''லிப்ட் முன்னாடி, ரயில்வே பிளாட்பாரம் மாதிரி கூட்டம் முண்டிஅடிக்கறது... 'தலைநகர்சென்னையிலயே இப்படிஇருந்தா எப்படி'ன்னு டாக்டர்களும், நோயாளிகளும் தலையில அடிச்சுக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''பல வருஷமா ஆடாம,அசையாம இருக்காங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...

''ஈரோடு எஸ்.பி., அலுவலக வளாகத்துலயேமாவட்ட குற்றப்பிரிவும் செயல்படுது... இந்த பிரிவுல டி.எஸ்.பி., பணியிடம் காலியா கிடக்குது பா...

''இன்ஸ்பெக்டரும்மெடிக்கல் லீவுல போயிட்டாரு... சமீபத்துல, இந்த பிரிவுலபல போலீசாரை எஸ்.பி.,இடமாறுதல் செஞ்சாரு...அதுல, இந்த பிரிவுக்கு வந்து ஒண்ணு, ரெண்டு வருஷங்கள் ஆன போலீசாரை மட்டும் மாத்தியிருக்காங்க பா...

''அதே நேரம், ஒன்பதுமுதல் 12 வருஷம் வரைபணியாற்றும் பல போலீசாரை இடமாற்றம்பண்ணல... 'இது என்னநியாயம்'னு மாறுதலுக்குஉள்ளான போலீசார் எல்லாம் புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''விளையாட்டு போட்டி பணத்தை, 'ஆட்டை' போடுதாவ வே...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் பெரியசாமி அண்ணாச்சி.

''விளக்கமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''பள்ளிக் கல்வித் துறைசார்பில் அரசு, உதவி பெறும் மற்றும் தனியார்பள்ளி மாணவர்கள் இடையே வருஷா வருஷம் விளையாட்டு போட்டிகள் நடத்துதாங்கல்லா... குழு போட்டிகள்,தடகளப் போட்டிகள்னு குறு மையம், மாவட்டம்,மண்டலம் மற்றும் மாநிலஅளவுல நடத்துதாவ வே...

''இதன்படி குறு மையம், மாவட்டம், மண்டல அளவிலான போட்டிகளை நடத்தும்பொறுப்பை, குறிப்பிட்டதனியார் பள்ளிகளிடம்ஒப்படைக்காவ... இதுக்கான செலவுகளை அந்தந்த பள்ளி நிர்வாகங் கள் ஏத்துக்கணும் வே...

''சில மாசங்களுக்குபிறகு, அந்த தொகையைபள்ளிகளுக்கு அரசு தந்துடும்... ஆனா, பெரும்பாலான மாவட்டங்கள்லபோட்டி நடத்தும் பொறுப்பை ஏற்கும் தனியார் பள்ளி நிர்வாகம்,உள்ளூர் அரசியல் கட்சியினர், தொழில் நிறுவனங்களிடம், 'ஸ்பான்சர்' வாங்கி போட்டியை நடத்தி முடிச்சிடுது வே...

''அப்புறமா அரசு ஒதுக்குற தொகையை, தங்களது பாக்கெட்டுல போட்டுக்கிடுது... அதுவும்இல்லாம, போட்டிகளைநடத்த, எல்லா பள்ளி மாணவர்களும், 'ஈசி'யா வந்து போகும் வகையில்மாவட்ட தலைநகரம், அடிப்படை கட்டமைப்புள்ள மைதானங்கள் இருக்கிற பள்ளிகளை தேர்ந்தெடுக்க மாட்டேங்காவ வே...

''எங்காவது ஒரு மூலையில இருக்கிற பள்ளி மற்றும் கல்லுாரியாபார்த்து போட்டிகளை நடத்துறதால, வந்துட்டு போறதுக்குள்ள மாணவர்கள் பாடு திண்டாட்டமாகிடுது... 'இதை எல்லாம் துறையின் அமைச்சர் சரி செய்யணும்'னு பெற்றோர் தரப்பு புலம்புது வே...'' என முடித்தார், அண்ணாச்சி.

அரட்டை முடிய, பெரியவர்கள் நகர்ந்தனர்.






      Dinamalar
      Follow us