/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
புளியம்பாக்கம் ஸ்ரீசக்தி கணபதி கோவிலில் வருஷாபிஷேகம்
/
புளியம்பாக்கம் ஸ்ரீசக்தி கணபதி கோவிலில் வருஷாபிஷேகம்
புளியம்பாக்கம் ஸ்ரீசக்தி கணபதி கோவிலில் வருஷாபிஷேகம்
புளியம்பாக்கம் ஸ்ரீசக்தி கணபதி கோவிலில் வருஷாபிஷேகம்
PUBLISHED ON : பிப் 15, 2025 12:00 AM

வாலாஜாபாத்,:வாலாஜாபாத் ஒன்றியம், புளியம்பாக்கம் கிராமத்தில் பழமை வாய்ந்த சக்தி கணபதி கோவில் உள்ளது.
இக்கோவில் பழுதடைந்ததையடுத்து, கிராம மக்கள் சார்பில் பரமாரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, கடந்த 2023ல் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்று 3ம் ஆண்டையொட்டி, வருஷாபிஷேகம் மற்றும் சங்காபிஷேகம் விழா நேற்று முன்தினம் விமரிசையாக நடந்தது.
விழாவையொட்டி, காலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதணை நடைபெற்றது.
அதை தொடர்ந்து, மாலையில் யாகம் வளர்ந்து பூஜைகள் செய்து, வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு, மலர் அலங்காரத்தல் எழுந்தருளி வினாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.