/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பாலியல் புகாரில் சிக்கியவருக்கு பதவி வழங்க பரிந்துரை!
/
பாலியல் புகாரில் சிக்கியவருக்கு பதவி வழங்க பரிந்துரை!
பாலியல் புகாரில் சிக்கியவருக்கு பதவி வழங்க பரிந்துரை!
பாலியல் புகாரில் சிக்கியவருக்கு பதவி வழங்க பரிந்துரை!
PUBLISHED ON : அக் 26, 2024 12:00 AM

''பாத யாத்திரை பாதிநடந்திட்டிருந்தப்பவே,கட்சியோட ஒரு பிரிவைகலைச்சுட்டாங்க பா...'' என்றபடியே, ஏலக்காய் டீயை உறிஞ்சினார் அன்வர்பாய்.
''எந்த கட்சியிலங்க...''என கேட்டார், அந்தோணிசாமி.
''லோக்சபா தேர்தல் முடிஞ்சதுமே, தமிழக மகளிர் காங்., தலைவி ஹசீனா சையது தலைமையில், 200 பெண்கள்பாத யாத்திரை துவங்குனாங்க...
''திண்டுக்கல்,தேனி உட்பட 21 மாவட்ட தலைநகரங்கள்ல,தினமும் 5 கி.மீ., வீதம் நடந்து, வீடு வீடா போய்பெண்களை பார்த்து, 'மத்திய பா.ஜ., அரசு, மக்கள் விரோத கொள்கையோட செயல்படுது'ன்னு பிரசாரம்பண்ணியிருக்காங்க பா...
''முதல் கட்டத்தை முடிச்சுட்டு, ரெண்டாவதுகட்ட பாத யாத்திரைக்கு தயாராகிட்டு இருந்தப்ப,மகளிர் காங்., அமைப்பையே டில்லி மேலிடம்ஒட்டுமொத்தமா கலைச்சிடுச்சு... இனி, புதிய உறுப்பினர் சேர்க்கை முடிஞ்சு, மாநில, மாவட்டநிர்வாகிகளை நியமிச்ச பிறகு தான், பாத யாத்திரை நடத்துவாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''அதுக்குள்ள அடுத்த தேர்தலே வந்துடுமுல்லா...'' என சிரித்த பெரியசாமி அண்ணாச்சியே, ''எஸ்.பி., பெயரை சொல்லி மிரட்டுதாரு வே...'' என்றார்.
''யார் ஓய் அது...'' எனகேட்டார், குப்பண்ணா.
''ஈரோடு எஸ்.பி., அலுவலக அமைச்சு பணியாளர்கள் பிரிவுல ஒரு அதிகாரி இருக்கார்...கடைநிலை ஊழியரா சேர்ந்தது முதல், இப்ப வரைக்கும் அங்கனயே தான் இருக்காரு வே...
''இடையில, சில வருஷங்கள் மட்டும் வெளி மாவட்டத்துக்கு போயிட்டு வந்தாரு... இவரிடம் ஆபீஸ் சம்பந்தமான பிரச்னைகள் குறித்து, ஊழியர்கள் ஏதாவது விளக்கம் கேட்டா, 'என்ன... மிரட்டுறீங்களா'ன்னு எடுத்தெறிஞ்சு பேசுதாரு வே...
''ஓய்வு பெற்ற போலீசாருக்கு பண பலன்கள் வழங்க, 'கட்டிங்'வசூல் பண்ணுதாரு... யாராவது தட்டிக் கேட்டா,'எனக்கு எஸ்.பி., மட்டுமில்ல... அவரது அப்பாவையும் நல்லாவேதெரியும்... என்னை யாரும் எதுவும் பண்ண முடியாது'ன்னு தெனாவெட்டா சொல்லுதாரு வே...
''இவரை பத்தி, எஸ்.பி.,யிடமே அமைச்சுபணியாளர் சங்கத்தினர்புகார் தெரிவிச்சிருக்காவ...எஸ்.பி., எந்த நடவடிக்கையும் எடுக்காததால, அதிகாரிக்கு எதிரா போராட்டம் நடத்த பணியாளர்கள் தயாராகிட்டு இருக்காவ வே...'' என்றார்,அண்ணாச்சி.
''பாலியல் குற்றச்சாட்டுல சிக்கியவருக்கு பதவி வழங்க பரிந்துரை பண்ணியிருக்கார் ஓய்...''என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''விருதுநகர் மாவட்டத்துல, தனியார் பார்மசி கல்லுாரியில் பேராசிரியரா இருந்த ஒருத்தர், பாலியல்குற்றச்சாட்டுல சிக்கி, அங்க இருந்து வெளியேற்றப்பட்டார்... இப்ப இவர், அகில இந்திய பார்மசி கவுன்சிலுக்கு, தமிழகம் சார்பில்நியமிக்கப்படும் உறுப்பினர் பதவியை பிடிக்க முயற்சி பண்றார் ஓய்...
''இவரை அந்த பதவிக்குபரிந்துரைக்கும்படி, துணைமுதல்வர் உதயநிதிக்கு, சென்னையைச் சேர்ந்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., ஒருத்தர் சிபாரிசு பண்ணியிருக்கார்... உதயநிதியும் சரியா விசாரிக்காம பரிந்துரை பண்ணிட்டார் ஓய்...
''வழக்கமா இந்த பதவிக்கு, பார்மசி கல்லுாரி முதல்வர் அல்லது பேராசிரியரை தான் நியமிப்பா... ஆனா, பாலியல் குற்றச்சாட்டுல சிக்கி, வேலை இழந்தவரை பரிந்துரை பண்ணிஇருக்கறது, அதிர்ச்சியைஏற்படுத்தி இருக்கு ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.