/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
செய்யூர் ஊராட்சி அலுவலகத்திற்கு புது கட்டடம் கட்ட வேண்டுகோள்
/
செய்யூர் ஊராட்சி அலுவலகத்திற்கு புது கட்டடம் கட்ட வேண்டுகோள்
செய்யூர் ஊராட்சி அலுவலகத்திற்கு புது கட்டடம் கட்ட வேண்டுகோள்
செய்யூர் ஊராட்சி அலுவலகத்திற்கு புது கட்டடம் கட்ட வேண்டுகோள்
PUBLISHED ON : ஜூன் 03, 2025 12:00 AM
செய்யூர், செய்யூர் ஊராட்சி மன்றத்திற்கு புதிய கட்டடம் அமைக்க வேண்டுமென, கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் ஊராட்சியில், 15 வார்டுகள் உள்ளன.
ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 15,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
செய்யூர், பாளையர்மடம் பகுதியில் குளக்கரை மீதுள்ள இ- - சேவை மையத்தில், தற்போது ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இ - -சேவை மையத்தில் போதிய இடவசதி இல்லாததால் மன்ற கூட்டங்கள் நடத்தவும், அலுவலக கோப்புகளை பாதுகாக்கவும் சிரமமாக உள்ளது.
அத்துடன், ஊராட்சி அலுவலகத்திற்கு பல்வேறு சேவைக்காக வரும் பொதுமக்கள் அமரவும் போதிய இடம் வசதி இல்லை.
ஊராட்சி மன்றத்திற்கு புதிய கட்டடம் அமைக்க வேண்டுமென, பல ஆண்டுகளாக கோரிக்கை எழுந்து வரும் நிலையில், அரசுக்குச் சொந்தமான காலி இடம் இல்லாததால், புதிய ஊராட்சி மன்ற கட்டடம் அமைக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.