தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ கைலாசநாதர் கோவில் குளம் துார்வாரி சீரமைக்க கோரிக்கை

கைலாசநாதர் கோவில் குளம் துார்வாரி சீரமைக்க கோரிக்கை

கைலாசநாதர் கோவில் குளம் துார்வாரி சீரமைக்க கோரிக்கை


PUBLISHED ON : ஏப் 30, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 30, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அய்யங்கார்குளம், காஞ்சிபுரம் ஒன்றியம், அய்யங்கார்குளம் கிராமத்தில் பழமையான கைலாசநாதர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள இக்கோவில் அருகில் கோவிலுக்கு சொந்தமான தெப்பகுளம் முறையான பராமரிப்பு இல்லாததால், சீரழிந்த நிலையில் இருந்த இக்குளத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து, கடந்த 2022ம் ஆண்டு ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், 23 லட்ச ரூபாய் செலவில் குளம் முழுதும் துார்வாரப்பட்டு குளத்திற்கு செல்ல படிகள் அமைக்கப்பட்ட குளக்கரை பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், கோவில் நிர்வாகம் குளத்தை முறையாக பராமரிப்பு இல்லாததால், குளத்தில் கோரை புற்கள் முளைத்தும், பாசி படர்ந்தும், குளத்து நீர் மாசடைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் குளத்தில் நீர்பிடிப்பு பகுதி முழுதும் கோரைப்புல் காடுபோல வளரும் சூழல் உள்ளது. லட்சகணக்கான ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட குளம், இரண்டரை ஆண்டிலேயே கோரை புற்களால் சீரழிந்து வருகிறது.

எனவே, கைலாசநாதர் கோவில் குளத்தில் வளர்ந்துள்ள கோரை புற்களை அகற்றி, குளத்தை சீரமைக்க ஹிந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us