/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
சேதமடைந்த சாலையால் விபத்து அபாயம்
/
சேதமடைந்த சாலையால் விபத்து அபாயம்
PUBLISHED ON : செப் 16, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்;சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, நல்லுார் அய்யப்பா நகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் அடுத்த, வையாவூர் கிராமத்தில் இருந்து, நல்லுார் அய்யப்பா நகருக்கு செல்லும் ஏரிக்கரை சாலை உள்ளது.
இச்சாலை வழியாக, அய்யப்பா நகரில் இருந்து வையாவூர், காஞ்சிபுரம், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இவர்களின் வசதிக்கு, 2023- -- 24ம் நிதி ஆண்டில், 49 லட்சம் ரூபாய் செலவில் தார் சாலை அமைக்கப்பட்டது.
இந்த சாலையில் கனரக வாகனங்கள் சென்றதால், தார் சாலை பெயர்ந்து வருகிறது.
எனவே, சேதமடைந்திருக்கும் சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.