PUBLISHED ON : ஜூன் 17, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திரு.வி.க., நகர், திரு.வி.க., நகரைச் சேர்ந்தவர் அஸ்லாம், 35; ஆட்டோ டிரைவர். கடந்த 15ம் தேதி முற்பகல் 11:00 மணியளவில், சவாரிக்காக திரு.வி.க., நகர் 22வது தெருவில், போலீஸ் பூத் அருகே ஆட்டோவை நிறுத்தி காத்திருந்தார்.
அப்போது, மது போதையில் வந்த வாலிபர், அஸ்லாமிடம் வீண் தகராறு செய்து, 10,000 ரூபாய் மதிப்பிலான மொபைல் போனை பறித்து மாயமானார்.
போலீஸ் பூத் அருகிலேயே நடந்த இந்த குற்றச் சம்பவம் குறித்து, திரு.வி.க., நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரித்த போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட பெரம்பூரைச் சேர்ந்த தினகரன், 24, என்பவரை நேற்று கைது செய்து, மொபைல் போனை மீட்டனர்.