/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஆட்டோ ஓட்டுநரை வெட்டிய ரவுடி கைது
/
ஆட்டோ ஓட்டுநரை வெட்டிய ரவுடி கைது
PUBLISHED ON : ஜூன் 20, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி, பூந்தமல்லி அருகே, காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத், 26; ஆட்டோ ஓட்டுநர். இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் பூபதி, 30, என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
பூபதி, அதே பகுதியைச் சேர்ந்த தன் நண்பரான ரவுடி ஷியாம், 28, என்பவரிடம் இதுகுறித்து கூறியுள்ளார். இதையடுத்து ஷியாம், வினோத்திடம் கேட்டபோது, நேற்று முன்தினம் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஷியாம், கத்தியால் வினோத்தின் தலையில் வெட்டினார்.
வினோத், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பூந்தமல்லி போலீசார், ரவுடி ஷியாமை, நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.