sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/கல்வி துறையை கலக்கும் இடைநிலை ஆசிரியர்!

கல்வி துறையை கலக்கும் இடைநிலை ஆசிரியர்!

கல்வி துறையை கலக்கும் இடைநிலை ஆசிரியர்!


PUBLISHED ON : பிப் 08, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 08, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''திமிங்கிலங்கள் கிடைக்காததால, சின்ன மீன்களுக்கு வலை வீசுதாவ வே...''என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.

''எந்த கட்சி விவகாரம் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''தி.மு.க., கூட்டணியில, 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தல்ல, இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் பஷீர் அகமது இருந்தாரு... இவர், தி.மு.க., ஆட்சியில வாரிய தலைவர் பதவியை எதிர்பார்த்து, கிடைக்காததால ஏமாற்றத்துல இருக்காரு வே...

''இதனால, அவரிடம்வடசென்னையை சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஒருத்தர் பேசி, 'மத்திய சென்னை லோக்சபா தொகுதியை உங்களுக்கு தர்றோம்... கூட்டணிக்கு வாங்க'ன்னு அழைப்பு விடுத்திருக்காரு... பஷீரும், கட்சி நிர்வாகிகளிடம் பேசி, சீக்கிரமே முடிவை அறிவிக்கிறதா சொல்லியிருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.

''பெரிய இடத்துல இருந்து பேசுறதால, அதிகாரிகளால தட்ட முடியலைங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''சென்னை, கோட்டையில இருக்கிற வி.வி.ஐ.பி., ஆபீஸ், 'லேண்ட் லைன்' போன்ல இருந்து, ஒரு அதிகாரி, கோவை வருவாய் துறை அதிகாரிகளுக்கு அடிக்கடி போன் போடுறாருங்க... மொபைல் போன்ல, வி.ஐ.பி., ஆபீஸ்னு காட்டுறதால, அதிகாரிகள் பதறியடிச்சு போனை எடுக்கிறாங்க...

''எடுத்ததுமே, 'நான் வி.வி.ஐ.பி.,யின் ஸ்பெஷல் பி.ஏ., பேசுறேன்'னு சொல்றவர், சில நில விவகாரங்களை சொல்லி, அதை பைசல் பண்ணும்படி கேட்கிறாருங்க... அதிகாரிகளும் தட்டாம செய்து குடுத்துடுறாங்க...

''ஆனா, அவர் சொல்ற பல வேலைகள், விதிகளை மீறியதா இருக்கிறதால, 'நாளைக்கு யாராவது கோர்ட்டுக்கு போயிட்டா, நம்ம கதி என்னாகும்'னு கோவை வருவாய் துறை அதிகாரிகள் பயந்துட்டு இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''நேத்து அமைதிப்படை படம் பார்த்தேன்... மணிவண்ணன் அருமையா நடிச்சிருக்காருல்ல...'' என்ற அன்வர்பாயே, ''ஆசிரியரின் ஆட்டம் தாங்க முடியலை பா...'' என்றார்.

''எந்த ஊர் விவகாரம் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மேற்பனைக்காடு அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியரா இருக்கிறவர், 'சிகரம்' சதீஷ்... இவர், சட்ட சபை தேர்தலுக்கு முன்னாடியே, 'மகேஷ் ஜெயிச்சு, பள்ளிக்கல்வி துறைக்கு அமைச்சர் ஆவார் பாருங்க'னு ஆரூடம் சொன்னாராம் பா...

''அவர் சொன்னது நடந்துட்டதால, நெகிழ்ந்து போன அமைச்சர், 'ஆசிரியர் மனசு திட்டம் ஒருங்கிணைப்பாளர்' என்ற பதவியை சதீஷுக்கு கொடுத்தாரு...இவருக்கு திருச்சி ஆசிரியர் இல்லத்தில் தனி அறையும் ஒதுக்கிட்டாங்க பா...

''தினமும் அங்க உட்கார்ந்துட்டு, ஆசிரியர்களின் பிரச்னை களை தீர்த்து வைக்கிறேன்னு பேரம் பேசுறாரு... சமீபத்துல, மதுரையில நடந்த கல்வித் துறை தொடர்பான ஆலோசனை கூட்டத்துல, துறை இயக்குனர்கள் கூட பேசாத நிலையில சதீஷ் மட்டும் பேசினாரு...

''அதே மாதிரி, துறையின் இயக்குனர், இணை இயக்குனர், முதன்மை கல்வி அலுவலர்களிடமும், 'அமைச்சருக்கு நெருக்கமானவன்'னு சொல்லியே, பல டீலிங்குகளை அசால்டா முடிக்கிறாருங்க...'' என முடித்தார், அன்வர்பாய்.

பெஞ்சில் மேலும் சிலர் இடம் பிடிக்க, பெரியவர்கள் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us