/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ரகசியமாக நடந்த 3,724 டிரைவர்கள், கண்டக்டர்கள் நியமனம்!
/
ரகசியமாக நடந்த 3,724 டிரைவர்கள், கண்டக்டர்கள் நியமனம்!
ரகசியமாக நடந்த 3,724 டிரைவர்கள், கண்டக்டர்கள் நியமனம்!
ரகசியமாக நடந்த 3,724 டிரைவர்கள், கண்டக்டர்கள் நியமனம்!
PUBLISHED ON : மார் 06, 2026 02:59 AM

இ ஞ்சி டீயை பருகியபடியே, ''தேர்தல் நேர பாசம்னு புலம்புறாங்க...'' என, விவாதத்தை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''எந்த கட்சியில ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''சேலம் மாவட்டம், வீரபாண்டி தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் நெருங்கிய உறவினர்களான அஞ்சு பேர் முட்டி மோதுறாங்க... இதனால, எந்த நிர்வாகி, யாருக்கு விசுவாசமா இருக்கார், யாரை பார்க்கிறார்னு, அஞ்சு பேரும் தனித்தனியா கண்காணிச் சிட்டு இருக்காங்க...
''அதுவும் இல்லாம, இந்த அஞ்சு பேருமே, கட்சி நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளு க்கு போன் போட்டு, 'எனக்கு தான் சீட் கிடைக்கும்... ஜெயிக்கிறதுக்கு உங்க ஆதரவு வேணும்... உங்களுக்கு என்ன செய்யணுமோ, அதை நல்லபடியா செஞ்சுடலாம்'னு அன்பொழுக பேசுறாங்க...
''அவங்களிடம் பேசிட்டு போனை வைக்கிற நிர்வாகிகள், 'இத்தனை நாள் நம்மை கண்டுக்காதவங்க, இப்ப தேர்தல் வந்ததும், நம்மை தேடி வர்றாங்க... எல்லாம் நடிப்பு'ன்னு புலம்புறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''இந்த முறை தேறுவாராங்கறது சந்தேகம் தான் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் சட்டசபை தொகுதியில், 2011, 2016, 2021ன்னு மூணு தேர்தல்கள்லயும் ஜெயிச்சவர், காங்., கட்சியின் பிரின்ஸ்... ஆனாலும், 'தொகுதிக்கு பெருசா எதுவும் செய்யல'ன்னு உள்ளூர் மக்கள் புலம்பறா ஓய்...
''இதனால, 'இந்த முறையும் பிரின்ஸ் போட்டியிட்டா, ஜெயிக்கறது சிரமம்... எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமா இருக்கு'ன்னு அ.தி.மு.க.,வினர் சொல்றா ஓய்...
''அதுவும் இல்லாம, 'அ.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர் பச்சைமால், 2001ல் குளச்சல்ல ஜெயிச்சு, அமைச்சராகவும் இருந்தார்... அப்ப, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, 11 மீனவ கிராமங்களுக்கு துாண்டில் வளைவு உள்ளிட்ட பல திட்டங்களை செஞ்சு குடுத்திருக்கார்... இதனால, அவருக்கு சீட் குடுத்தா சுலபமா ஜெயிச்சிடலாம்'னு, அவரது ஆதரவாளர்கள் சொல்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''சத்தம் காட்டாம, 3,724 பேரை நியமிச்சிருக்காவ வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த துறையில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''தமிழகத்துல, எட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் இருக்குல்லா... இங்க காலியா இருந்த, 3,724 டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பணியிடங்களை நிரப்ப, போன வருஷம் அறிவிப்பு வெளியிட்டாவ வே...
''இதுக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, டிரைவர் மற்றும் கண்டக்டர் லைசென்ஸ் வச்சிருந்த பலரும் விண்ணப்பிச்சாவ... இவங்களுக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடி, தேர்வுகளும் நடந்துச்சு வே...
''ஆனா, தேர்வு முடிவுகளை வெளியிடாம வச்சிருந்தாவ... இந்த சூழல்ல, அரசு உத்தரவுப்படி, அந்தந்த போக்குவரத்து கழக எம்.டி.,க்கள் ரகசியமா, 3,724 டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு பணி நியமன ஆணைகளை குடுத்துட்டாவ வே...
''இதுல, தி.மு.க., நிர்வாகிகள் ஒரு வேலைக்கு தலா, 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை வாங்கி, அதுல மூணு பங்கு தொகையை துறையின் மேலிடத்தில் குடுத்து, பலருக்கும் வேலைகளை வாங்கி குடுத்திருக்காவ... தேர்வு எழுதி வேலை கிடைக்காதவங்க, 'தேர்வு எல்லாம் வெறும் கண்துடைப்பு தானா'ன்னு புலம்பிட்டு இருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

