/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
தொடர் திருட்டு கொள்ளையன் சிக்கினான்
/
தொடர் திருட்டு கொள்ளையன் சிக்கினான்
PUBLISHED ON : நவ 15, 2024 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாங்காடு,
குன்றத்துார் அடுத்த தரப்பாக்கம் பகுதியில் நான்கு வீடுகளின் பூட்டை உடைத்து, நகை மற்றும் பணத்தை, சனிக்கிழமை மர்ம நபர் திருடிச் சென்றார்.
விசாரணையில், கொள்ளையில் ஈடுபட்டது திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்பு, 33, என தெரிந்தது. கொத்தனாரான அன்பு, தான் பணியாற்றும் இடத்தின் அருகே பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு, இரவு நேரத்தில் பூட்டை உடைத்து பணம், நகை ஆகியவற்றை கொள்ளையடித்து உள்ளார்.
அந்த வகையில், 10க்கும் மேற்பட்ட வீடுகளில் 1.50 லட்சம் ரூபாய் பணம், 25 சவரன் நகைகளை கொள்ளையடித்தது தெரிந்தது. 25 சவரன் நகைகளை பறிமுதல் செய்த மாங்காடு போலீசார், அன்புவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.